பாக்.,குடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தவில்லை

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தானுடன், இந்தியா எப்போதும் சிறந்த உறவையே விரும்புகிறது.
எங்களுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திய போதும் கூட, நாங்கள் வர்த்தகத்தை நிறுத்தவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேருக்கு 'விசா' வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ மற்றும் விளையாட்டு விசாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப் போகிறது. இது, சேவைத் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
பிராந்தியங்களில் விளைவிக்கப்படும் மற்றும் மனித உழைப்பால் உருவாகும் அனைத்தையும் நாட்டின் பிறபகுதிகளுக்கு அரசு சலுகை விலையில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்து அங்கிருந்து பொருட்கள் பாகிஸ்தான் வியாபாரிகளுடன் செய்கின்ற வர்த்தகத்தை முற்றிலும் நிறுத்தவேண்டும். அங்குள்ள காஸ்மீரிகள் வெகு விரைவில் இந்தியாவுடன் இணைந்து விட முயற்சித்து அது திருவினையாவது நடக்கும். முழுவதும் இயல்பாக இந்தியாவுடன் இணைந்து விட முயற்சிகளை மாற்றுவலிகளிலும் செய்யலாம்.
நல்ல செய்தி வாழ்த்துவோம் வளரட்டும் வர்த்தகம் மலரட்டும் உறவுகள் /சீனா வை கட்டுப்படுத்தும்
திவால் நிலையில் உள்ள நாடு. வர்த்தக தொடர்புகளை ஜாக்கிரதை கையாள வேண்டியது அவசியம். படிப்படியாக குறைத்து முற்றிலும் தவிர்த்தல் நலம்
அடிப்படைவாதிகள் ஒரு பொழுதும் திருந்த வாய்ப்பே இல்லை. ஆகவே வர்த்தகத்தை நிறுத்தினால்க்கூட தப்பில்லை..
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பாகிஸ்தானிடம் பணமில்லையய பிறகு எப்படி வர்த்தகம் செய்ய இயலும் . வெறுங்கையால் மூளம் போட முடியாது .