விழிப்புணர்வு பயிலரங்கம்
கீழக்கரை, : எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் இணைந்து மீனவர்களுக்கான கடல் கால நிலை தகவல்களை அனைத்து மீனவர்களும் பயன்படும் வகையில் மாவட்ட அளவிலான சேவைகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் கீழக்கரை முகமதுசதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி மைய தலைவர் வேல்விழி பேசினார்.
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மைய விஞ்ஞானி சீனிவாஸ் கடலோர மாநிலங்களுக்கு வழங்கும் தகவல்களை பற்றி விளக்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!