சகிப்புத்தன்மை இல்லை

தமிழக அரசு எப்படி செயல்படுகிறது, அது அனுப்பிய சில மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என அனைத்து விஷயங்களையும் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் வாயிலாக தெரிவித்து வருகிறார் கவர்னர் ரவி.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும் போது, 'கவர்னரின் செயல்பாடுகளைப் பார்த்தால், அவருக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் கிடையாது' என்றார். அவருடைய இந்தப் பேச்சு, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் வெளியானது.

கவர்னர் ரவி உடனே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பினாராம். தி.மு.க., தலைவர்கள் தன்னைப் பற்றி அவதுாறாக பேசி வருகின்றனர் என்றும் அவர் கடிதம் எழுதினாராம்.
'கவர்னருக்கு எதிராக கட்டுரைகள் வந்தால் இதை கவர்னர் பொறுத்துக் கொள்வதில்லை; அவருக்கு சகிப்புத்தன்மை இல்லை; இந்த லோக்கல் விஷயங்களை அவரே சமாளித்தாக வேண்டும்' என, சில சீனியர் பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (21)
வெளிப்படையாக தெரியும் யார் பிரச்சினை என்று ... மக்களுக்கு தெரியும் எனவே இதில் கருது கூற வேண்டியதில்லை எல்லாம் இயற்கை நியதியின் படி சமன் ஆகும் ...
தலை உண்டு ,மூளை இல்லை அது என்ன....???
கவர்னர் என்பது ஒரு பதவி. அதற்கு அவமரியாதை செய்யும் போது அவரிடம் சகிப்புத்தன்மையை எதற்கு எதிர்பார்க்கிறீர்கள். பொது விமர்சனங்கள் கார்ட்டூன்கள் இவற்றில் சகிப்புத்தன்மை காட்டலாம். முதல்வரின் வார்த்தைகளில் கண்ணியம் குறையுமானால் அவர் எதற்கு சகித்துக்கொள்ள வேண்டும்.
இந்த செய்தி தினமலரில் வந்ததுதான் ஆச்சர்யம். ஆளுநரின் இறுதி சடங்கு போல் திமுக கூட்டணியினர் நடத்துவதை அரசு வேடிக்கை பார்த்தும் பாராமல் இருக்க சகிப்பு தன்மை கண்டிப்பாக தேவையேயில்லை. ஆளுநருக்கு சகிப்பு தன்மை இல்லை என்று கூறும் பாஜக மூத்த தலைவர்கள் திராவிட கட்சிகளின் அடிவருடிகளுடன் போட்டி போடுகின்றனரோ என்னவோ.. இந்த நிலைமையிலும் கண்ணியம் தவறாமல் செய்வதையும் சொல்வதையும் யோசித்து பேசும் இந்த ஆளுநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தேசமும் தெய்வீகமும் முக்கியம் என்று கருதும் பாஜகவின் அண்ணாமலை அவர்களின் தலைமையில் இந்த மாதிரி கருத்து சொல்லும் மூத்த தலைவர்கள் சாபக்கேடுகளே.
கவர்னர் செய்வது மிக மிக தவறானது இந்த மாதிரி மாநில அரசு கேவலமானமுறையில் நடந்து கொண்ட உடனே அந்த அரசை நீக்கவேண்டும் என்று அவர் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு ஒரு உத்தரவு அனுப்பி அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும் அதை விட்டு விட்டு இப்படி அமைதியாக இருக்கக்கூடாது.