ADVERTISEMENT
சென்னை--அரசு பஸ்களில் தனியார் விளம்பரத்தின் வாயிலாக, வருவாய் ஈட்டும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, 19 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை ஒரு கி.மீ., இயக்க, 65 ரூபாய்க்கும் மேல் செலவாகிறது.
ஊழியர்களின் சம்பளம், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்களின் விலை ஏற்றம் காரணமாக, போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
நஷ்டத்தைக் குறைக்க, பிற வழிகளில் வருவாய் ஈட்டும் வழிகளை, அதிகாரிகள் குழு ஆராய்ந்து வருகிறது.
அதன்படி, பஸ்சில் விளம்பரம் செய்வது, போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களை வணிக ரீதியில் பயன்படுத்துவது உள்ளிட்ட வருவாய் பெருக்கும் வழிகளிலும், செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும், அரசு ஈடுபட்டு வருகிறது.
அதில் முக்கியமாக, அரசு பஸ்களில் தனியார் விளம்பரங்கள் வாயிலாக, வருவாய் ஈட்டுவதில், அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
பஸ்சின் பின்பக்கம், ஜன்னல்களின் மேல் கண்ணாடிகள், ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம், கைப்பிடிகள், பஸ்சின் பக்கவாட்டுப் பகுதிகள் என, விளம்பரம் செய்ய தனியாரை ஊக்குவிக்கின்றனர்.
இதில், ஊருக்கு ஊர், பஸ்சுக்கு பஸ் விளம்பர கட்டணம் மாறுபடுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 'ஏசி' பஸ்களில், 'செஸ் ஒலிம்பியாட்' குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டன.
அதையடுத்து, விஜய் நடித்த வாரிசு படத்துக்கான விளம்பரங்கள் செய்யும் முயற்சியை, தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது. அதற்காக, ஒரு பஸ்சுக்கு, நாள் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் விளம்பர கட்டணமாக நிர்ணயித்தனர்.
ஆனால், அமைச்சர் உதயநிதியின் நிறுவனம், அஜித் நடித்த துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியதால், ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில், அந்த விளம்பரத்தை அதிகாரிகள் கைவிட்டனர்.
தற்போது, சென்னையில், பஸ் முழுதும் விளம்பரம் செய்ய, வணிக நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன்படி, 10க்கும் மேற்பட்ட பஸ்களில், தனியார் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாசகர் கருத்து (4)
1.குவைத் நாட்டில் உள்ளது போல் மாடி பஸ் கொண்டு வரலாம். 2.ஒரு புறநகர் பஸ்450கிமீ /16மணிநேரம் வசூல் நன்றாக இருக்கும் 3.பீக்வர் சொகுசு சர்வீஸ்4+48மணிநேரம் ஒரு நாளைக்கு ஓடினால் வசூல் அதிகமாகும். 4.விளம்பரம் லக்கேச் கேரியர் 5.இனிமேல் இலவசம் கொடுக்காதீர்கள். நஷ்டம் ஏற்படும்.
இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு மானிய விலையில் மத்திய ,மாநில அரசுகள் டீசல் எரிபொருளை வழங்கலாம் ,இதனால் டீசல் எரிபொருள் அடிக்கடி விலை ஏற்றுவதால் பேருந்துகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கலாம் .
Nal muyarchi
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வசூல் அதிகரிக்க 1.குவைத்தில் போல்மாடி பஸ் கொண்டு வரலாம் 2.ஒரு புறநகர் பஸ்450கீம்/16மணி நேரம் நடை போதும் 3.பீக்வர் சர்வீஸ் ஓரு நாளைக்கு 4+48மணிநேரம் போதும். 4.நாள் விளம்பரம் லக்கேச் கேரியர் கொரியர் சர்வீஸ் பல வழிகள் உள்ளன.