ADVERTISEMENT
ராமநாதபுரம், : இந்திய ராணுவத்தில் இளைஞர்களை அதிகஅளவில் சேர்ப்பதற்காக புதிதாக ஆன்லைனில் விண்ணப்பித்து பொது நுழைவு தேர்வு மூலம் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளதாக திருச்சி மண்டல இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு மையம் இயக்குனர் கர்னல் தீபக் குமார் கூறினார்.
ராமநாதபுரத்தல் அவர் கூறியதாவது:
இந்திய ராணுவத்தில் சேர புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இதன்படி பத்தாம்வகுப்பு படித்த இருபாலரும் joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு ஆன்-லைன் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இதில் வெற்றிபெறுபவர்கள் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் தேர்வு செய்யும் இடங்களில் அழைக்கப்பட்டு அங்கு உடல் தகுதி தேர்வும், மூன்றாம் கட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
விருப்பம் உள்ள இளைஞர்கள் மார்ச் 20 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பொது நுழைவு தேர்வு இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடக்கிறது. நுழைவு கட்டணம் ரூ.500ல் 50 சதவீதம் செலவை ராணுவம் ஏற்கிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
நுழைவு தேர்வு குறித்து எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், பதிவு மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பப்படும். இடைத்தரகர்கள் தலையீடு இன்றி ஆட்சேர்ப்பு முற்றிலும் வெளிப்படையாக தகுதி அடிப்படையில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!