இடுக்கியில் கோடை மழை 41 சதவிகிதம் குறைவு
மூணாறு, : இடுக்கி மாவட்டத்தில் கோடை மழை துவக்கத்திலேயே 41 சதவிகிதம் குறைவு என தெரியவந்தது.
கேரளாவில் கடந்தாண்டிலும், நடப்பு ஆண்டிலும் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே மே 27ல் துவங்கியது. செப்டம்பரில் மழை குறைந்தபோதும் டிசம்பர் வரை மழை நீடித்தது. அதனால் குளிர் காலம் சற்று காலதாமதத்துடன் துவங்கி பிப்ரவரி இறுதி வரை நீடித்ததால் கடந்த காலங்களில் பிப்ரவரியில் பெய்த கோடை மழை இந்தாண்டு வாய்ப்பு இன்றி போனது.
மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கோடை மழை பெய்தது.
கடந்தாண்டு மார்ச் ஒன்று முதல் 18ம் தேதி வரை மாவட்டத்தில் 25.5 மி.மீ., மழை பெய்த நிலையில் இந்தாண்டு அதே கால அளவில் 15.1 மி.மீ., மழை பெய்தது. இது 41 சதவிகிதம் குறைவாகும்.
மாவட்டத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் வெப்பம் குறையவில்லை. சராசரி 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. அதன் அளவு மூணாறில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. நேற்று காலை குறைந்தபட்ச வெப்பம் 10 டிகிரி செல்சியஸ் இருந்தது. அதன் அளவு பகலில் 19 டிகிரி செல்சியஸ்சாக அதிகரித்தது. மாவட்டத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் வெப்பம் சற்று குறைவு என்பது குறிப்பிடதக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!