ADVERTISEMENT
சிவகாசி, ; திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கல் கிடங்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் நெற்குத்தி பாறை பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கல் கிடங்கு உள்ளது.
மழை பெய்து கல் கிடங்கு நிரம்பிய நிலையில் நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் இதில்தான் கலக்கின்றது.
இதனால் கல் கிடங்கு முழுவதுமே பாசி படர்ந்து காணப்படுகின்றது. மழைக்காலங்களில் கல்கிடங்கிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றது.
இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தால் இப்பகுதியில் குடியிருக்கவே முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர். கொசு தொல்லை, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுகின்றது. எனவே கல் கிடங்கினை துார்வாரி தண்ணீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!