இநாம் திட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்துார்
விருதுநகர், ; மாவட்டத்தில் சாத்துார், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் 'இநாம்' திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன, என விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. விருதுநகர், ராஜபாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் 2020 ஏப். 29 முதல் இநாம் திட்டத்தில் இணைக்கபப்ட்டு இதுவரை 11 ஆயிரத்து 911 விவசாயிகள், 260 வியாபாரிகள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
2023 பிப்ரவரி வரை ரூ.4.18 கோடியில் 18 ஆயிரத்து 535 குவிண்டால் விளைபொருட்கள் விற்று விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெற்றுள்னர். மத்திய அரசு, விவசாயிகளின் நலன் கருதி விருதநகர் மாவட்டத்தில் சாத்துார், அருப்புக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களையும் இநாம் திட்டத்தில் இணைக்க தற்போது அனுமதி அளித்துள்ளது. எனவே சாத்துார், அருப்புக்கோட்டை விவசாயிகள், வியாபாரிகள் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு சாத்துார் 04562 260410, 90033 56172 என்ற எண்ணிலும், அருப்புக்கோட்டை 04566 220225, 82483 69001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!