ADVERTISEMENT
உத்தமபாளையம், : ''மாணவர்களுக்கு படிக்கும் போதே நாட்டுப்பற்று, மொழிப்பற்றும் இருக்க வேண்டும்'', என ஐதராபாத் போலீஸ் பயிற்சி கல்லூரி இயக்குனர் ராஜன் பேசினார்.
உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் செந்தால் மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் முகமது மீரான் வரவேற்றார்.
கல்லூரி முன்னாள் மாணவரும், ஐதராபாத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி மைய இயக்குனருமான ஏ.எஸ். ராஜன் பேசியதாவது : படிக்கும் காலத்தில் திட்டமிடல், குறிக்கோள் விடா முயற்சியுடன் கல்வி கற்றால் வெற்றி எளிதாகும். படிக்கும் போதே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றுடன் இருக்க வேண்டும்,
இன்றைய நவீன தொழில்நுட்பங்களை நமது அறிவின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தவறான பாதைக்கு செல்ல தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடாது. இந்த கல்லூரி பல்கலை., தகுதி பெற வேண்டும். என்றார். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக நடந்த நிறுவனர் நாள் விழா, உத்தம நபி உதய தினவிழாவில் வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!