ADVERTISEMENT
பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான கண்மாய்கள், குளங்களில் வண்டல் மற்றும் களிமண் விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது .
இதனைத்தொடர்ந்து - மாவட்டத்தில் மொத்தம் 159 கண்மாய்களில் வண்டல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி மண்பாண்ட தொழிலாளர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
அறிவிக்கப்பட்ட 159 கண்மாய்களில் கம்பம் பள்ளத்தாக்கு பாசன வசதியளிக்கும் கண்மாய்களும் அடக்கம்.
குறிப்பாக பெரியாறு வைகை வடிநில உபகோட்டத்தில் உள்ள ஒடப்படி, ஒட்டுகுளம், வீரப்ப நாயக்கன்குளம், குப்பு செட்டிகுளம், கழுநீர் குளம், தாமரைக்குளம், கருங்கட்டான்குளம், செங்குளம் ஆகிய குளங்களில் இப்போதும் தண்ணீர் முழு அளவில் உள்ளது. தண்ணீர் உள்ள குளங்களில் வண்டல் எடுக்க முடியாது. இந்த கண்மாய்களை பட்டியலில் இருந்து நீக்கியிருக்கலாம்.
ஆனால் அதிகாரிகள், தண்ணீர் வற்றிய பின் அள்ளி கொள்ளலாம் என்கின்றனர்.
அளவுகோல் எவ்வளவு
வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சையாக இருந்தால் 90 கனமீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு களிமண் 60 கனமீட்டரும்,மற்ற தேவைகளுக்கு 30 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வேளாண் அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!