மின்சாரம் தாக்கி பெண் பலி
ராஜபாளையம், ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் மதுரை தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பாண்டிச்செல்வி 36. இவர்களுக்கு குழந்தை இல்லை.
பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்த போது மின்தடை ஏற்பட்டது. அருகில் உள்ள வீட்டிலிருந்து மின் ஒயர் மூலம் மின் இணைப்பு பெற்றுள்ளார். ஒயரிலிருந்து இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததில் அதை தொட்ட பாண்டிச்செல்வி துாக்கி வீசப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!