தனியார் துறை வேலைவாய்ப்புமுகாம்: 880 பேர் பணி நியமனம்
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு, பயிற்சி துறை சார்பில் லாந்தை செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
வேலைவாய்ப்பு முகாமிற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.119 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான 880 பேருக்கு பணி நியமனை ஆணை வழங்கினர்.
வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!