ADVERTISEMENT
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மீன் இறக்கும்பாலத்தை சுற்றிலும் மணல் சூழ்ந்ததால் மீன்களை இறக்க முடியாமல்மீனவர்கள் திணறுகின்றனர்.
மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன் பிடிக்கும்பாம்பன் மீனவர்கள் வலையில் சீலா, பாறை, வெளமீன், மாஊழா உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் சிக்குகிறது.
அதிக ருசியான இம்மீன்கள் கோவை, கேரளா, பெங்களூரு மார்க்கெட் மற்றும் சில உயர் ரக மீன்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
இதனால் பாம்பன் மீன்களை சுகாதாரமாகவும், துரிதமாக ஐஸ்சில் பதப்படுத்துவதற்காக நபார்டு வங்கி மூலம் ரூ. 7 கோடியில் 2018ல் பாம்பன் கடற்கரையில் மீன் இறக்கும்பாலம், மீன்கள் பதப்படுத்த கூடம் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பிப்., முதல் ஏப்., வரை பாலத்தை சுற்றி மணல் சூழ்ந்து விடுகிறது.
இதனால் மீனவர்கள் மீன்கள், மீன்பிடி தளவாட பொருள்களை பாலத்தில்இறக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இங்கு தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் கோடை சீசனில் பாலத்தை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது, என மீனவர்கள் தெரிவித்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!