Load Image
Advertisement

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

சென்னை-தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Latest Tamil News

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், நாளை காலை 10:00 மணிக்கு சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என முதல்வர் அறிவித்தார்.

எனவே, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகி உள்ளது. அதேநேரம் யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும் என்பதை அறிய, மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது.

அவர்களை சமாதானப்படுத்த, முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு.

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Latest Tamil News
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், இம்மாதம் 31ம் தேதி மாநிலத்தின் கடன், 6.53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது எவ்வளவு கடன் உள்ளது என்ற விபரமும் நாளைய பட்ஜெட்டில் தெரியும்.

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும். அதன்பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும்.

இக்கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


வாசகர் கருத்து (4)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    நாளை கரிநாள் மோசமான நாள் மற்றொரு நாளை பார்த்து தமிழக சட்டசபையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை சட்டசபையில் தாக்கல் செய்யாமல் மற்றொரு நல்ல நாளில் தாக்கல் செய்தால் தமிழக மக்களுக்கு பயனாக இருக்கும். நாள் செய்வது போன்று நல்லவரகூட செய்யமாட்டார்கள் என்று மரபு உண்டு கேட்டால் கேளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள் உங்கள் இஷ்டம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தமிழக பட்ஜெட்டில் டாஸ்மாக் சரக்கு விலை குறையுமா என்பதே குடிமகன்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு,அரசாங்கம் இதைப் பூர்த்தி செய்யுமா ..???

  • ராமகிருஷ்ணன் -

    திமுகவினரின் பட்ஜெட் நிச்சயம் தமிழக மக்களின் சாபத்தை பெறும், அதிலும் டக்ளஸ் பட்ஜெட்டில் மக்கள் நலன் இருக்காது கட்சியினர் நலன் மட்டுமே இருக்கும். வருமானம் முடிவில் தலைமை குடும்பத்தினருக்கு போகுமாறு திட்ட மிடப்படும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    டக்ளசின் புலம்பலை கேட்க ஆவலாய் இருக்கிறேன். வழக்கம்போல முதல்வரை புகழ்பவர் இந்த முறை ஜூனியர் முதல்வரை புகழ்ந்து தள்ளுகிறாரா என்று பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up