ADVERTISEMENT
சிவகாசி, : சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரியில் 2021 ல் படித்த மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி தலைமை வகித்தார். நிர்வாக உறுப்பினர்கள் மகேஸ்வரன், ப்ரீத்தி முன்னிலை வகித்தனர். நிர்வாக உறுப்பினர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி வரவேற்றார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடர்பியல் துறை தலைவர் நாகரத்தினம் மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முதுகலை, இளங்கலையைச் சேர்ந்த 1036 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!