Load Image
Advertisement

கிராமங்களில் ஆய்வு



மதுரை, : மதுரை லேடி டோக் கல்லுாரி சுற்றுச்சூழல் ஆய்வு மைய உன்னத் பாரத் அபியான் திட்ட குழுவினர் வெளிச்சநத்தம், மாலைப்பட்டி, பூலான்பட்டி, மீனாட்சிபுரம், சின்னப்பட்டி சென்று தேவையை ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பை வழங்கினர்.

மக்கும், மக்காத குப்பையை பிரிப்பது குறித்த செயல் விளக்கம் காண்பித்து வண்ண குறியீட்டு குப்பைத் தொட்டிகளை வழங்கினர். தாவரவியல் துறை பேராசிரியர்கள் மூலிகை செடிகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைத்தனர். உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement