Load Image
Advertisement

நீர் வழித்தடங்களில் சீமை கருவேலம் மரம் அகற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Tamil News
ADVERTISEMENT


கமுதி, ; கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாவில் விவசாயிகள் பயன்பெறும்வகையில் வரத்து கால்வாய்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய் விளை நிலங்களில் சீமை கருவேலம் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த பலஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:

மாவட்டத்தில் வைகை ஆறு கிருதுமால் நதி, பரளையாறு, கூத்தன் கால்வாய், குண்டாறு உள்ளிட்ட கண்மாய், குளங்கள் வரத்து கால்வாயில் கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ளது. இதனால் நீர் வழித்தடங்கள் அழிந்து மழைநீர் கண்மாய்களுக்கு செல்ல முடிய வில்லை. காட்டுப்பன்றிகள், மான்களின் இருப்பிடமாக மாறி வருகிறது.

காட்டுப்பன்றிகள் பயிர்களை அழிக்கிறது. இதனால்சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாவில் பருவமழை பெய்ப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வைகை ஆற்றில் வெள்ள உபரிநீர் ஏற்படும் வேளையில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து பரளையாறு கால்வாயை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர வேண்டும்.

கிருதுமால் நதியால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பசும்பொன் கிராமம் வரை பாசனம் பெறும் கண்மாய்கள் உள்ளன. வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு நீர் இழப்பை ஈடுசெய்ய வைகை அணை, முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வழங்க உத்தரவாதம் செய்ய வேண்டும்.

குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் வழியாக மலட்டாறு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் விடப்பட்டுள்ளது. வரத்துகால்வாய் மூலம் 1500 ஏக்கரில் பாசன வசதியின்றி 54 கிராமங்கள் பயன் பெறாத நிலை உள்ளது.

எனவே கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்வாயை தூர்வாரி தண்ணீர் தேக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழகஅரசு வேளாண் பட்ஜெட்டில் இதை அறிவிக்க வேண்டும், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement