கோபத்தில் துணை ஜனாதிபதி

இப்படி இரண்டு தரப்பும் கோதாவில் இறங்கியுள்ளதால், பார்லி., முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் கோபத்தில் உள்ளார். ராஜ்யசபா நடக்காதது ஒரு புறம் இருக்க, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபையின் மத்திய பகுதிக்கு வந்து இவருடைய மேஜைக்கு அருகில் கோஷம் போடுவது கோபத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது ஜக்தீப் கடும் கோபத்தில் உள்ளார்.

'எப்போது பார்த்தாலும் என் சீட்டிற்கு அருகே வந்து ஒழிக, ஒழிக என கோஷம் போடுகிறீர்களே; ஒரு நாளாவது இப்படி கூச்சலிடாமல் இருந்தது உண்டா' என ஒரு சீனியர் தி.மு.க., --- எம்.பி.,யைப் பார்த்து ஜக்தீப் கேட்டாராம். அந்த எம்.பி., பதில் எதுவும் சொல்லவில்லையாம்.
உடனே அந்த எம்.பி.,யிடம், 'உங்களுடைய பதவிக்காலம் எப்போது முடிகிறது' என ஜக்தீப் கேட்க, இதற்கு தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், துணை ஜனாதிபதியோ இவர்கள் மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம்.
வாசகர் கருத்து (14)
நோ வொர்க் நோ பெ என்ற சட்டம் வெறும் அரசாங்க வேலையாளர்களுக்கு மட்டுந்தானா இவர்களுக்கு பொருன்தாதா? விமானத்தில் வருவதற்கு முதல் வகுப்பு உத்திரவாதம் தலைநகரில் எல்லா வசதிகளுடன் ஏசி பங்களா வாசம் போராதத்திற்கு மற்றுமொரு பங்களா வைத்துக்கொள்ள அனுமதி. ஊர் சுத்த ஏசி கார் எல்லாம் இலவசம் சாப்பாடு டிபன் எல்லாம் இலவசம் இன்னும் என்னன்னமோ இலவசாலிஸ்டில் இருக்கின்றன ஆனால் பார்லிமென்டில் அவை சபையில் கூச்சல் கும்மாளம் வெளிநடப்பு. காந்தி சிலைமுன் நன்றாக சாப்பிட்டுவிட்டு சாகும்வரை இல்லை இல்லை சற்று நேரம் உண்ணாவிரதம் என்று போர்வை மாற்றப்படும். பிறகு ஊர் சுத்தல் இதுதானய்யா நடப்பு. மக்களே கவனியுங்கள் இவர்களை திரும்ப திரும்ப இனி தேர்ந்தெடுத்து பாரிலிமென்டர்டிற்கு அனுப்பவே அனுப்பாதிர்கள். மக்கள் பணத்தை வீணாக்கும் மாவீரர்கள்
சபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே நிறுத்த அதிகாரம் இருக்கிறதே? கோபத்தால் தன்னைத் தானே அடித்துக் கொள்ளப்போகிறார் ... பார்த்து ....
ஜனாதிபதி நிம்மதியாக கன்னியாகுமரி, மதுரை என்று சுற்றுவது போல் இவரும் சுற்றுலா செல்ல வேண்டியது தானே, இவர்களுக்கு எல்லாம் வேறு என்ன வேலை இருக்கிறது?
குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றமுடியாதா? ஏன் இந்த அவமான சின்னங்களை நமது பிரதிநிதிகள் போல் அங்கே உலவவிடவேண்டும்?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்த திராவிட கும்பல்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை போட்டுக்கொண்டனர், தமிழகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட MP கலால் கடந்த 10 வருடங்கள் தமிழ வளர்ச்சிக்கும் தமிழ மக்களுக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை இனியும் இந்த திராவிட கட்சிகளை தேர்தெடுத்தால் தமிழகம் வளர்ச்சி பின்னடைவை சந்திக்கும், இனிமேல் தமிழ மக்கள் புத்திசாலி தனமாக இனி நடந்து கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த்.