பராமரிப்பற்ற பள்ளி கட்டடம்
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகின்றன.
இங்குள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே உள்ள இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவ்வளாகத்தில் ஒரு அங்கன்வாடி, நான்கு வகுப்பறை, கட்டடங்கள் உள்ளன.
அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததால் பூட்டப்பட்டு, பள்ளி வகுப்பறையில் மையம் செயல்படுகிறது. இந்நிலையில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்கள், வகுப்பறை வராண்டா மேல் சிலாப்பின் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தும், விழும் நிலையிலும் உள்ளன. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பள்ளி கட்டடத்தை பராமரிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!