பள்ளி நிர்வாகிகள் பொதுக்குழு
தேனி,: தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக லட்சுமிவாசன், செயலாளராக வேணுகோபால், பொருளாளராக சரவணக்குமார், துணைத்தலைவர்களாக சண்முகநாதன், ராமசுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக மூர்த்திராஜன், தாமோதரன், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுக்குழுவில் தற்காலிக அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்தல், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!