ADVERTISEMENT
கொலை செய்ய பதுங்கியவர்கள் கைது
மதுரை: கீரைத்துறை போலீசார் மேலத்தோப்பு பகுதியில் ரோந்து சென்றபோது, சிலர் ஓட்டம் பிடித்தனர். அங்கு அரிவாள் கிடந்ததால் விரட்டிச்சென்று அவர்களை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அப்பகுதி சரவணமூர்த்தி 23, பேபி சரவணன் 22, காளீஸ்வரன் 22, குமரேசன் எனத்தெரிந்தது. இவர்கள் பிரபல ரவுடிகள் வெள்ளை காளி, சபா ரத்தினத்தின் கூட்டாளிகள். யாரை கொலை செய்ய பதுங்கியிருந்தனர் என விசாரணை நடக்கிறது.
அம்மன் தாலி செயின் திருட்டு
மதுரை: செல்லுாரில் உச்சிகாளியம்மன் கோயில் உள்ளது. உள்ளே புகுந்த மர்மநபர் அம்மனின் 6 பவுன் மதிப்புள்ள தாலி செயினை திருடிச்சென்றார். பூஜாரி ராமமூர்த்தி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
21 பவுன் நகைகள் மீட்பு
மேலுார்: ஈரோடு மாவட்டம் சித்தோடு ஜெகன்கான் 59. ஈரோடு மின்வாரிய அதிகாரி. இவரிடம் நகைகளை வழிப்பறி செய்ததாக சங்கரன் கோவில் கருப்புச்சாமி 31, தர்மபுரி ராஜிவ்காந்தி 30, மேலுார் கருப்புசாமி 31, திசையன்விளை செந்தில்குமார் 30, ஆகியோரை சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் கைது செய்தார். இவர்கள் மேலுார் நகை வியாபாரிகள் சிலரிடம் நகை விற்றது தெரிந்தது. 21 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
மஞ்சுவிரட்டு: ஐவர் மீது வழக்கு
கொட்டாம்பட்டி: எம்.வெள்ளாலபட்டி முத்துப்பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்தது. இதுதொடர்பாக மணப்பச்சேரி தெய்வேந்திரன் 55, ஜெயக்குமார் 35, குன்னக்குடியான் 70, போஸ் 55, சாமிக்கண்ணு 40, மீது கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்தார்.
விபத்தில் டிரைவர் பலி
நாகமலை புதுக்கோட்டை: ஈரோட்டில் இருந்து விருதுநகர் சென்ற லாரி பஞ்சர் ஆனதால் நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் நின்றிருந்தது. சுண்டல் ஏற்றி வந்த லாரி டிரைவர் தர்மபுரி பெரியசாமி 35, முன்நின்ற லாரியை கவனிக்காமல் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!