கல்லுாரிகளுக்கான கலை விழா போட்டி
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்கள் பிரசன்னவெங்கடேசன், ரேணுகா, சுதா, கல்லூரி முதல்வர் அருள்குமார் முன்னிலை வகித்தனர்.
கவிதை, ஓவியம், விளம்பர நடிப்பு, போட்டோ எடுத்தல், நடனம் மற்றும் பாட்டு போட்டி உட்பட பல போட்டிகளில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 24 கல்லூரிகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போடி சி.பி.ஏ., கல்லூரி முதல்வர் சிவக்குமார்,' மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் விதம் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் செல்வி, முதுநிலை கம்ப்யூட்டர் துறை தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!