குப்பையில் தீ
திருமங்கலம், : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் சுங்கிராம்பட்டி அருகில் தரிசு நிலங்கள் உள்ளன. இங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பையில் நேற்று முன்தினம் இரவு சிலர் தீ வைத்தனர். குடியிருப்புகள் வரை தீ பரவியது. வருவாய் ஆய்வாளர் அருண், வி.ஏ.ஓ., ரமேஷ் தகவலின்பேரில் திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் ஒரு மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!