டூவீலர் திருடியவர் கைது
போடி, : குப்பிநாயக்கன்பட்டி கரட்டுப்பட்டி ரோட்டில் வசிப்பவர் தெய்வேந்திரன் 36. மீனாட்சிபுரம் கள்ளர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் போடி நந்தவனம் தெருவில் பலசரக்கு கடைக்கு சென்று டூவீலரை நிறுத்தி உள்ளார். திரும்ப வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை.
நேற்று போஜன் பார்க் அருகே ஆட்கொண்டான் தெருவைச் சேர்ந்த முனிராஜ் 35, தெய்வேந்திரனின் டூவீலரை ஓட்டி சென்றது தெரிந்தது. இவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் முனிராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!