திறன் மேம்பாடு விழா
சோழவந்தான், : சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 23 கிராமங்களில் நவ்சயோக் அறக்கட்டளை சார்பில் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு, கற்றல் திறன், அனுபவ பயிற்சி, அறிவொளி கதை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த கிராமங்களில் ஒரு ஆண்டாக பயிற்றுநர் மூலம் நடத்தினர்.
இப்பயிற்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. இதைதொடர்ந்து திருவேடகத்தில் மகளிர் தினம், ஆண்டு விழா, விருது வழங்கும் விழா நடந்தது. நிர்வாகி பரிதேஷ் சேகல் தலைமை வகித்தார். வட்டார ஒருகிணைப்பாளர் செமினா முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் உமா வரவேற்றார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர்கள் பழனியம்மாள், சிறுமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாபெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!