ADVERTISEMENT
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ராஜபாளையம் வட்டார தலைவர் புஷ்பலதா வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார்.
மாநில பொதுக் குழு உறுப்பினர் முருகன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் சரவணக்குமார் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை விளக்கி பேசினார்.
மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்டத் தலைவர் வள்ளுவன், முன்னாள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமலைக் கண்ணன் பேசினர்.
அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, சிவகாசி வட்டார தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் பொருளாளர் வில்சன் பர்னபாஸ் போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!