தேர்தல் கமிஷனுக்கு பன்னீர்செல்வம் கடிதம்
சென்னை:'அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல், சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் கமிஷன் ஆவணங்களில், எந்த மாற்றமும் செய்யக் கூடாது' என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல் நடத்தப்படுவதாக, 'தேர்தல் ஆணையர்கள்' என்ற பெயரில் விஸ்வநாதன், ஜெயராமன் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷன் ஆவணப்படி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது. அவர்களே கட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பு. ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெறாமல், தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, சட்ட விதிகளின்படி, தேர்தல் ஆணையர்கள் அறிவிப்பு சட்ட விரோதமானது. மேலும், கடந்த ஜூலை, 11ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அ.தி.மு.க., பதவிகளை மாற்றம் கோரி, ஏதேனும் மனு வரப்பெற்றால், அதன் அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!