Load Image
Advertisement

ஆசை காட்டி பெண்ணை மோசம் செய்த நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

சென்னை:திருமண ஆசை காட்டி, மோசம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலைக்கு துாண்டியதாக, அதிகாரியின் பெற்றோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி; சென்னையில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டின் கீழ் இயங்கும் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையத்தில், குரூப் -1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.

இவருடன் படித்த சென்னையைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நட்புடன் பழகினார். இருவரும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் வாக்குறுதி அளித்து, பல முறை தனிமையில் இருந்துள்ளார்.

குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சிறை துறையில் நன்னடத்தை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல காரணங்களை கூறி, திருமணத்தை தவிர்த்தார். பின், தனக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடக்க போவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தங்களின் காதல் பற்றி, சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம், அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, பெண்ணின் வீட்டுக்கு வந்த சத்தியமூர்த்தியின் பெற்றோர், ஜாதியை கூறி திட்டியதாகவும், அவரது ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியதோடு, மகன் செய்த தவறுக்கு பணம் கொடுப்பதாக கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த பெண், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, குமரன்நகர் போலீசார் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் வன்முறை மற்றும் தற்கொலைக்கு துாண்டியதாகவும், அவரது பெற்றோருக்கு எதிராக, தற்கொலைக்கு துாண்டியதாகவும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், மூவருக்கும் எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யதனர். இந்த சம்பவம் 2018 ஜனவரியில் நடந்தது.

இந்த வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக கூறி சத்தியமூர்த்தி, அவரது பெற்றோர் ரெங்கு, சாரதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார்.

சத்தியமூர்த்திக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement