ராகுல் நாளை சஸ்பெண்ட்-?

சமீபத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்ற ராகுல், லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மற்றும் அந்நாட்டு பார்லி., உள்ளிட்ட இடங்களில் பேசினார்.
அங்கு இவர் கூறிய கருத்துகள், இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த பிரச்னை, தற்போது நடந்து வரும் பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எதிரொலித்து வருகிறது.
பா.ஜ., -உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிஉள்ளன.
இந்த விவகாரத்தில், ராகுல் பார்லி.,யில் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பா.ஜ., உறுப்பினர்கள், சமீபத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர்.
அப்போது, 'ராகுல் பேசிய பேச்சு குறித்து ஆராய சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். விசாரணையின் அடிப்படையில், அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும்' என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நாளை பார்லி.,யில் மீண்டும் எழுப்ப பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அதே சமயம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் மற்றும் காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவர் என்பதால் நாளையும் சபை நடவடிக்கைகள் முடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, பா.ஜ., கோரிக்கைபடி, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தால், ராகுல் நாளை 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -
வாசகர் கருத்து (12)
ராகுலின் இந்த அறியாமையை சரியாக பிஜேபி பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு அவரை சஸ்பெண்ட் செய்தால் தேவை இல்லாமல் அனுதாபத்த ஏற்படுத்திவிடும்
எந்த ஒரு இந்தியாவில் வசிக்கும் குடிமகனுக்கும் இந்திய மேலாண்மை, ஒற்றுமை, நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மிகவும் முக்கியமானது. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழ்நாட்டின் வீராவேசம் பேசும் கட்சியின் தலைவர் சென்னை ஏர்போட்டில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் அனைவருக்கும் ஒரேநீதி வேண்டும்.
விடுங்க. அடுத்த தேர்தல்ல அமேதில நிக்கமாட்டான். கேரளா ஜனங்களே அவன தோக்கடிச்சிட்டாங்கன்னா, அது மிக சரியான தண்டனையா இருக்குமில்ல? கேரளா மக்கள் ஒன்னும் அவ்வளவு ரோசங்கெட்டவர்கள் இல்லையே?
உள்நாட்டு விவகாரத்தை வெளிநாட்டில் பேசியது, விரக்தியில் வெளிப்பாடு மற்றும் அநாகரீகம். இந்தியாவை பிடிக்காதவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறலாம்னு அரசு வெளிப்படையா அறிவிக்கணும். அப்பறம் பாருங்க.
சஸ்பெண்ட் மட்டும் போதாது... அடுத்த 20 வருடம் இந்த பப்பு எந்த இந்திய அரசியல் போட்டியிலும் போட்டியிட தகுதி இல்லை என தண்டனை தர வேண்டும்.