''தேர்தல் ஆணையர் உள்ளிட்ட நிர்வாக ரீதியான நியமன விஷயங்களில் நீதிபதிகள் அங்கம் வகித்தால், நீதித்துறை பணிகளை யார் கவனிப்பது; யார், யாருக்கு என்ன வரையறை என்பது நம் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த லட்சுமண ரேகையை யாரும் மீற வேண்டாம்,'' என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்தது.
அதில், 'தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெற வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து புதுடில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நம் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பார்லிமென்டில் சட்டம் இயற்றப்பட்டு, நியமனம் செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் பார்லிமென்டில் அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை. வெற்றிடம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் விமர்சிக்கவில்லை. இந்த விஷயத்தில் அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கூறவில்லை.
அதேநேரத்தில், முக்கியமான நியமனங்கள் தொடர்பான விஷயத்தில் தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இடம் பெற்றால், நீதித்துறை பணிகளை கவனிப்பது யார்?
நம் நாட்டில் நியமனம் தொடர்பான பல விஷயங்கள் உள்ளன. வழக்குகளை விசாரித்து, மக்களுக்கு நீதி அளிக்கும் விஷயத்துக்குத் தான் நீதிபதிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நியமனங்கள் குறித்த விஷயத்தில் நீதிபதிகள் தலையிட்டால், அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பல கேள்விகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
நீதிபதிகள் நிர்வாக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருந்தால், அது கேள்விக்குள்ளாகும். நிர்வாகம் அல்லது நியமனம் தொடர்பான ஒரு வழக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதியின் கீழ் விசாரணைக்கு வந்தால், அதில், அந்த நீதிபதி தீர்ப்பளிக்க முடியுமா?
நீதியின் கொள்கையே சமரசம் செய்யப்படும். யார் யார் எப்படி செயல்பட வேண்டும், அவர்களுக்கான வரையறை என்ன என்பது குறித்து நம் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த 'லட்சுமண ரேகை'யை யாரும் மீற வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லியில் நேற்று நடந்த பிரபல பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: தற்போதுள்ள நடைமுறைகளில் எல்லாமே சிறப்பாக செயல்படுகிறது என கூறிவிட முடியாது. ஆனால், நீதிபதிகளை நியமனம் செய்யும், 'கொலீஜியம்' அமைப்பு, நாம் உருவாக்கியதில் சிறந்த அமைப்பு; இதை மேம்படுத்த வேண்டும். நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமானால், வெளியில் இருந்து வரும் நெருக்கடிகளில் இருந்து அவற்றை பாதுகாக்க வேண்டும். இதில் அனைவரிடமும் ஒரே மாதிரியான கருத்து ஏற்பட வேண்டும் என்பது இல்லை. வேறுபாடுகள் இருப்பதில் தவறு இல்லை. கருத்து வேறுபாடு இருந்தாலும், இந்த விஷயத்தில் சட்ட அமைச்சருக்கு சமமாக பேசி பிரச்னையை வளர்க்க விரும்பவில்லை.வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசிடமிருந்து எங்களுக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. என், 23 ஆண்டு கால நீதிபதி வாழ்க்கையில், வழக்கில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என யாரும் என்னிடம் கூறியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (6)
இப்போதுள்ள நீதிபதி சந்திரசூட் காங்கிரஸ் குடும்ப பாரம்பரியம். ஒரு சார்பு நீதி கொடுப்பவர்.. கண்டிப்பதில் தப்பில்லை
கோலிஜியம் அமைப்பு எப்படி சிறந்த அமைப்பு? அரசியல் சாசன படி இல்லை என்றால், தற்காலிக அமைப்பு. ?மக்களுக்கு சிவில் நீதி வழங்க மாவட்ட ஆட்சியர் போதும். நீதிமன்றத்தில் பணம் நடமாடும் நிர்வாகம், ஊழல், ஜாமீன், அரசியல் வழக்கிற்கு முன்னுரிமை.? அரசு துறை தலைவர் (கவர்னர், ஜனாதிபதி) முன் அனுமதி இல்லாமல் அரசு அதிகாரிகளை விசாரிக்க முடியுமா? வக்கீல் மனுக்களை தணிக்கை செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.
சட்ட அமைச்சர் கூறுவது மிக சரி. இவரை விட்டால் நீதிமன்ற அதிகாரங்களை ஒழுங்குபடுத்த அரசால் முடியாது. பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் கூடி ஒரு முடிவை பரிந்துரை செய்வது கடினம். இதில் நீதிபதி இணைய வேண்டிய அவசியம்? தேர்தல் ஆணையர் பதவி என்ன கிளார்க் பதவியா? லஞ்சம் வாங்கி யாரையாவது மக்கள் பிரதிநிதியாக நியமித்த புகார் உண்டா? இந்த குழு கூடவே கூடாது. எதன் அடிப்படையில் இந்த உத்தரவு? எதிர்காலத்தில் குழப்பம், சட்ட சிக்கல் அதிகரிக்கும். அரசு இதில் உறுதியாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தவறாக வாதிட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதித்துறை வரம்பு மீறுகிறது என்பது நிதர்சனம் கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்.
நீதித்துறை நியமனத்தில் அரசு தலையிடக்கூடாதாம் அவர்களுக்குள் மூத்த சிலர் சேர்ந்து கீழே உள்ளவர்களை சீனியரிட்டி படி நியமிப்பார்களாம்.ஆனால் தேர்தல் ஆணையர் விஷயத்தில் இவர்கள் தலயிடுவார்களாம் .ஒரு ஓரின சேர்க்கையாளர் நீதிபதியாகி உள்ளார் அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமண சட்டபூர்வ அந்தஸ்து கேட்டு வழக்கு வருகிறது அவர் என்ன அது தவறு நம் கலாசாரத்தில் இல்லை என்றா தீர்ப்பளிக்க முடியும். இதனால் இந்தியா குடும்ப அமைப்புகளே வெளிநாடுகள் போல சிதறும் ஏற்கனவே கடவுள மறுப்பாளர்கள் இடதுசாரிகள் மற்றும் பெண்ணுரிமைவாதிகள் என்ற பெயரில் இந்த கலாசாரத்தில் பல குழப்பங்கள் உண்டாக்கப்படுகின்றன அமைச்சர் சொல்வதே சரி .TN.சேஷன் தேர்தல் ஆணையராக பணியாற்றியபோது அவரை கட்டுப்படுத்த இதே காங்கிரஸ்தான் 2. பேரை நியமித்தது .இனி ஆட்சிக்கே வரமாட்டோம் என்பதால் இப்போ பிஜேபி க்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்