நம் அண்டை நாடான சீனாவுடன், பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே, பல ஆண்டுகளாக பேச்சு நடந்து வருகிறது. எனினும், பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
கடந்த 2020ல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நம் ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள், வீர மரணம் அடைந்தனர்; 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சீனாவின் மொபைல் போன் செயலிகளுக்கு, மத்திய பா.ஜ., அரசு தடை விதித்தது. கல்வான் சம்பவம் தொடர்பாக, நம் ராணுவ அதிகாரிகள் மற்றும் துாதரக அதிகாரிகள், சீன தரப்பு அதிகாரிகள் குழுவுடன் பல முறை பேச்சு நடத்தி உள்ளனர். ஆனால், இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், ''கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லை பகுதியில் ஆபத்தான நிலை ஏற்பட்டு உள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
இது பற்றி தனியார் 'டிவி' நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:
சீனாவுடனான உறவு, சவாலான மற்றும் அசாதாரணமான சூழ்நிலையில் உள்ளது. 1988ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் அங்கு சென்று வந்ததில் இருந்து, 2020 வரை எல்லையில் அமைதியான சூழ்நிலை நிலவியது.
இதை, 2020ல் சீனா மீறியது. இதன் தொடர்ச்சியாகவே கல்வான் மோதலும் நடந்தது. தற்போது, கிழக்கு லடாக்கின் மேற்கு இமயமலை பகுதியில், இந்தியா - சீனா இடையேயான எல்லை பகுதியில், நிலைமை ஆபத்தான முறையில் உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, முறியக்கூடிய வகையில் பலவீனமாக உள்ளது. லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அளவுக்கு அதிகமாகவே குவிக்கப்பட்டு உள்ளனர்.
நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அண்டை நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டு, பின் எதுவும் நடக்காதது போல் செயல்படுபவர்களோடு, எங்களால் நட்பை தொடர முடியாது. சீனாவுடனான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இயல்பு நிலைக்கு திரும்பாது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (22)
என்ன சொல்ல வருகின்றார்???அப்போ ராகுலுடன் ஒரு சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால் ராகுல் சோனியா சீனாவுடன் சமரசம் செய்து கொண்டதை சுட்டி காட்டி சீனா இந்தியாவுடன் சமரசம் ஆகிவிடுமா.
உலகத்தில் எங்கு பார்த்தாலும் இந்த மாதிரி இருநாடுகளிடையே பிரச்சினைகள் . தென் வட கொரியா , ஜப்பான் சீனா , இஸ்ரேல் பாலஸ்தீனம் , இந்தியா பாகிஸ்தான் , ரஷ்ய உக்ரைன் , எதுவேமே அரசியல் ரீதியாக பேசி சமரசம் செய்து கொண்டால் அமைதியான பாதுகாப்பான உலகை அனுபவிக்கலாம் . கலி காலத்தில் நல்லது சொன்னாலும் செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பது உண்மை தானோ ? இந்தியா இன்னும் கிழக்கு வடக்கு மேற்கு திசைகளில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சியை கொண்டு வர முடியாத நிலை உள்ளது . இப்போதைக்கு தெற்கு மட்டும் பரவாயில்லை ...அமைதியை விரும்பும் ஜனநாயக நாடு இந்தியா என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது . இருந்தும் ஐ நாவில் நமக்கான இடம் வீட்டோ பவர் கிடைக்க பெற வேண்டும்
வளர்ச்சியின் லட்சணம்தான் சமீபத்திய கன்னியாகுமரி அங்கிக்காரர் மேட்டர் .அதுவும் 🤔மாநிலத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டம். வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியில்லை.
இதனுடைய விளக்கம் என்ன: சீனாவுடனான உறவு, சவாலான மற்றும் அசாதாரணமான சூழ்நிலையில் உள்ளது. 1988ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் அங்கு...
2020ல் சீனா மீறியது, மூன்றுவருடமாகாக நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்ன நடவடிக்கை எடுத்திர்கள், இன்னமும் காங்கிரஸ் தலைவர்களை குறைகூறி கொண்டு ...
"அண்டை நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டு, பின் எதுவும் நடக்காதது போல் செயல்படுபவர்களோடு, எங்களால் நட்பை தொடர முடியாது.". சபாஷ் டாக்டர் ஜெய்ஷ்ங்கர். "வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சியே இல்லாமல் வைத்திருப்பதே எங்களின் கொள்கை, அதனால் சீனா கிளர்ந்தெழாமல் பார்த்துக்கொண்டோம்" என்று காங். காலத்தைய 'ராஜதந்திரத்திற்கு' விளக்கம் சொல்லப்பட்டது. அதுவா நமது வீரம்? நமது ராணுவம் உலகத்தின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று என்பதும், எவ்வளவு சிரமங்களுக்கிடையில் அவர்கள் சிறப்பான பணியாற்றுகிறார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால், அதை காங். காலத்தில் எவ்வாறு பயன்படுத்தினார்கள், அப்போது சீனர்கள் நமது எல்லையில் தாக்கினால் எப்படி திருப்பி அடிக்காமல் வேடிக்கை பார்க்கச்சொல்லப்பட்டது என்பதெல்லாம், சமீபத்தைய கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் நாம் திருப்பிக்கொடுத்தபோது வெளிவந்த விஷயங்கள். இன்னும் எல்லைக்கோடு பிரச்சனை உள்ளிட்ட தீர்க்கப்படாத நூறாண்டு விஷயங்கள் நிறைய நமக்கும் சீனாவுக்கும் உண்டு. அவற்றை ஒரே நாளில் தீர்க்கச் சொல்வது நகைச்சுவை. ஆனால், முதல் முறையாக ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர், வெளிப்படையாக 'ஒப்பந்தத்தை ஒரு இடத்தில் மீறிவிட்டு, இன்னொரு இடத்தில் எதுவும் நடக்காததுபோல் வந்தால், அப்பேற்ப்பட்டவர்களுடன் நட்பு பாராட்ட முடியாது' என்று கூறியுள்ளார். அப்படி இதற்கு முன் பல்லாண்டுகளாக நடந்து கொண்டிருந்தது என்பதும், அதனால்தான் அந்த அண்டைநாடு அப்பேர்ப்பட்ட எதிர்பார்ப்புடன் வருகிறது என்பதும் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. இனியாவது சீனா அண்டைநாடுகளுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை அதன் ஷரத்துக்களும், மாண்புகளும் மீறாமல் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்போம். நடைமுறையில் மீறினால், ஆங்காங்கே அவ்வப்பொழுது தக்க பதிலடி கொடுக்க தயாராகவும் இருப்போம். கூடவே, அப்படி ஒரு மோதலைத் தடுக்க நேர்மையான வழிமுறைகளையும் நம்வரையில் பின்பற்ற நடவடிக்கை எடுப்போம். அதே நேரத்தில், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அந்தஸ்துடன் நமக்கு வந்த நிரந்தர உரிமையை, நேரு அந்த உரிமையை 'நம்மைவிட சீனாதான் இதற்கு உரிமை கொண்டாட தகுதி உள்ளது" என்று சொல்லி தங்கத்தட்டில் வைத்து அதை அந்நாட்டிற்கு வழங்கிய தவறை, நாமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறுவதின் மூலமாக ஓரளவு சரிசெய்ய தொடர்முயற்சி செய்துக்கொண்டிருப்பதன் பலனாக, கூடிய சீக்கிரம் அந்த உரிமையைப் பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.