நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாக்., விமான போக்குவரத்து துறை
கராச்சி,-பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டுக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு கடன் தொகை அதிகமாகி விட்டதாலும், பாகிஸ்தான் உள்ளூர் கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், அங்கு கடும் நெருக்கடி நிலவுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. இந்நிலையில், இந்த நெருக்கடி தற்போது பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறையிலும் எதிரொலித்துள்ளது.
கடந்த ஜனவரி நிலவரப்படி, பாகிஸ்தானுக்கு விமானங்களை இயக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய, 2,400 கோடி ரூபாய் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
இந்த தொகையை அமெரிக்க டாலராகத் தான் பாகிஸ்தான் செலுத்த வேண்டும். ஆனால், ஏற்கனவே அங்கு நிதி நெருக்கடி நிலவுவதாலும், ரொக்க கையிருப்பு இல்லாததாலும், இந்த தொகையை அவர்களால் செலுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.
விமான நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளை உள்ளூர் கரன்சிக்கு விற்றாலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கான கட்டணத்தை அமெரிக்க டாலராகவே செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால், பாகிஸ்தான் விமான போக்குவரத்து கழகத்திடம் அந்த அளவுக்கு நிதியில்லை. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விமானங்களை இயக்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் கடந்த மாதம் முதல், பாகிஸ்தானுக்கான விமான சேவையை நிறுத்தி விட்டது.
அடுத்த சில வாரங்களில் மற்ற விமான நிறுவனங்களும் இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (3)
சர்வ தேச அளவில் கச்சா எரிபொருள் விலை உயர்த்த போதும் உள் நாட்டில் குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்பதற்காக (அது தேர்தல் ஆண்டு என்பதால்) காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி வைத்த 50000 கோடி கடனை (சர்வதேச அளவில் கச்சா எரிபொருள் விலை குறைந்தும் தேர்தல் ஆண்டில் கூட உள் நாட்டில் விலை குறைக்காமல்) அடைத்து 2500 கோடி வட்டியை குறைத்த மோடியின் அரசு எங்கே? கடனிலேயே தளவாடங்கள் வாங்கி நாட்டையே திவாலாக்க முற்படும் பாகிஸ்தான் அரசு எங்கே? கி 2014 மற்றும் 2019 லும் மோடி அரசை தேர்ந்தெடுத்தது தான் நாம் செய்த மிகப்பெரிய புண்ணியம்
அறிவீலிகள் நாட்டை ஆளுவைத்தால் அந்த நாடே அழிவது நம் கண்முன்னே பார்க்கிறோம். இதுபோன்ற நிலைமையை எதிர்காலத்தில் தடுக்கவேண்டுமானால், பாஜக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை அரசாளவேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாகிரஸ்தனை பார்த்து எவரும் பரிதாபப்படாதீர்கள்.இந்திய மக்களாகிய நமக்கு பாகிர்ஸ்தான் செய்த கொடுமைகள் என்னால் மரக்கையாளாது. மன் ணிக்கமுடியாது/