Load Image
Advertisement

இம்ரான் கான் வீட்டில் தேடுதல் வேட்டை வெடி பொருட்களை கைப்பற்றிய போலீசார்

லாகூர்-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார், அவரது கட்சித் தொண்டர்களை கைது செய்ததுடன், ஏராளமான வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நம் அண்டை நாடான பாக்.,கின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்தபோது, பரிசுகள் வாயிலாக கிடைத்த வருவாயை கணக்கு காட்டாமல் சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், உரிய பதிலளிக்காத இம்ரானுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்ய லாகூரில் உள்ள வீட்டிற்கு கடந்த வாரம் போலீசார் சென்றபோது, அங்கு குவிந்திருந்த அவரின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக, நேற்று தன் கட்சித் தொண்டர்களுடன் இம்ரான் சென்றார்.

இதையடுத்து, லாகூர் ஜமன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்த ஆயிரக் கணக்கான போலீசார், அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் நுாற்றுக்கணக்கானோரை கைது செய்தனர்.

வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த போலீசார், அங்கிருந்த வெடி பொருட்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், ''என் மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது, போலீசார் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியது சட்டப்படி சரியா,'' என கேள்வி எழுப்பிஉள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement