Load Image
Advertisement

புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ஐ.ஆர்.இ.டி.ஏ.,

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி:மத்திய அரசு, ஐ.ஆர்.இ.டி.ஏ., நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட அனுமதி வழங்கி உள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த ஐ.ஆர்.இ.டி.ஏ., நிறுவனத்தில், அரசின் வசம் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் பங்கு வெளியீட்டின்போது, புதிய பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, அரசு அனுமதியை வழங்கி உள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017ல், 10 ரூபாய் மதிப்பில், 13.90 கோடி பங்குகளை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.ஆர்.இ.டி.ஏ.வுக்கு 1,500 கோடி ரூபாய் மூலதனம் வழங்கியதை அடுத்து, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பங்கு வெளியீடு, அரசாங்கம் அதன் முதலீட்டை திரும்ப பெறுவதற்கும், பொதுமக்கள் இந்நிறுவன பங்குகளை வாங்கி, அதிலிருந்து பலன்களைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும்.

மேலும், ஐ.ஆர்.இ.டி.ஏ., தன்னுடைய வளர்ச்சி திட்டங்களுக்காக தேவைப்படும் மூலதனத்தின் ஒருபகுதியை திரட்டவும் பயன்படும் என கருதப்படுகிறது.

ஐ.ஆர்.டி.இ.ஏ., நிறுவனம், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஈடுபட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    இப்பிடி பொதுச்சொத்தை கொஞ்சம் கொஞ்சமா வித்து சாப்புடுங்க. யாரும் கேக்க மாட்டாங்க. எல்லா பொதுத்துறை பங்குகளும் ஜனாதிபதி பேரில் தான் இருக்கு. வித்தாலும் அவர் பேரில்தான் விக்கணும். மெடல் மட்டும் இவிங்க குத்திப்பாங்க.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    Thanks, but சந்தைக்கு வந்த பிறகு தான் வாங்குவேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement