Load Image
Advertisement

வேறு நீதிபதியிடம் வழக்கை மாற்ற கோரிய சுகேஷின் மனு தள்ளுபடி

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: தன் மீதான ரூ. 200 கோடி மோசடி வழக்கினை வேறு நீதிபதியிடம் ஒப்படைக்ககோரிய மோசடி மன்னன் சுகேஷின் மனுவை கோர்ட் தள்ளுபடிசெய்தது.


பல்வேறு மோசடிகள் செய்ததாக சுகேஷ் சந்திரசேகரன் மீது புகார் எழுந்தது. இதில் மருந்து நிறுவன அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன், காதலி லீனா மரியா பால் என்பவருடன் கைது செய்யப்பட்டார்.Latest Tamil News
இவர் மீது மேலும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் நிலுவையில் உள்ளன. சிறையில் உள்ளார்
ரூ. 200 கோடி மோசடி வழக்கு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் தன் மீதான இந்த வழக்கினை வேறு நீதிபதியிடம் ஒப்படைத்து அவர் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சுகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.இதற்கிடையே இந்த வழக்கில் இன்று ஆஜரான சுகேஷின் காவல் மார்ச் 31 வரை நீட்டித்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.



வாசகர் கருத்து (5)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இது ஒரு துன்புறுத்தல் இவனை விட ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம் இது ஏன் காட்டப்படுவதில்லை.நீதியே அநீதி

  • Fastrack - Redmond,இந்தியா

    தினகரிடன் வாங்கிய பணத்துக்கு வழக்கு இல்லையா

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இவனுக்குமட்டும் அரசியல் பின்புலம் இருந்திருந்தால், இவனை ஒன்றும் செய்திருக்க முடியாது. நல்லவேளை.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இதெல்லாம் ஒரு மோசடியா? அப்படியென்றால் அரசியலை வைத்து கொள்ளையடித்திருக்கும் கோமகன்களை என்னவென்று சொல்வது? அரசியல் தலைவர்கள் நட்பை பயன்படுத்தி வங்கிகளை கொள்ளையடித்து சுகமாய் வாழும், உயரே நிற்கும் நபர்களை என்னவென்று சொல்வது?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஏமாறுபவர்கள் நாட்டில் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். இதுபோன்ற மோசடி வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை கொடுக்கவேண்டும். வழக்கை தள்ளி வைத்து தள்ளி வைத்து நீட்டிக்கொன்று சென்றால், அது குற்றம்செய்தவர்களுக்கு உதவுமே தவிர, அவர்களை தண்டிக்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்