Load Image
Advertisement

கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

Tamil News
ADVERTISEMENT
திருநெல்வேலி: வரும் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு நான் எந்தவித விளக்கமும் சொல்ல முடியாது.

அதிமுக.,வாக இருந்தாலும், திமுக.,வாக இருந்தாலும், காங்கிரசாக, பா.ஜ.,கவாக இருந்தாலும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளனர். இது கடந்த கால வரலாறு. தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.,வின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (20)

  • venugopal s -

    அப்போது தமிழக பாஜகவில் யாருடைய பேச்சு கட்சியின் கருத்து என்று கூற முடியுமா?

  • RRR - Nellai,இந்தியா

    இந்த அண்ணாச்சி அதிமுகவின் அடிவருடி... அதிமுகவின் கை காலில் விழுந்தாவது பதவியை தேடிக்கொள்ள வேண்டுமே என்ற கவலை இவருக்கு...

  • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

    எத்தனை ஓட்டு எடுத்தாலும் தனித்து நின்றாலே கட்ஷி வளரும்.சிறிது காலத்தில் கலகங்களை காணாமல் செய்யலாம். தனித்து நிற்பதே நமது கட்ஷிக்கு நல்லது.

  • M.S.Jayagopal - Salem,இந்தியா

    நயினார் நாகேந்திரன் எப்பொழுது வேண்டுமானாலும் வேறு கட்சிக்கு தாவிவிடுவார். அண்ணாமலை, அதிமுகாவுடன்தான் கூட்டணி வேண்டாம் என நினைப்பதாக தெரிகிறது. கூட்டணியே வேண்டாம் என்று சொன்னதாக தெரியவில்லை.

  • sangu - coimbatore,இந்தியா

    இது ஒரு பொறுப்பற்ற பேச்சு, அண்ணா வை போல் துடிப்பாக கட்சியை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் அண்ணாமலை. பிஜேபி கூட்டணி அமைத்தால் பிற்காலத்தில் mdmk, தேதிமுக, போல் கரைந்து போக வேண்டியதுதான். தனித்து போட்டியிட்டால் நிச்சயமா இன்னும் 5 வருடத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்படும், திமுக விலும் அடுத்த தலைவர் பார்றாக்குறை ஏற்படும். அது பிஜேபி ஆட்சியில் அமர வழி செய்யும். ஏனென்றால் திமுக ஊழல் என்றால் அதிமுக வும் யோக்கியம் இல்லை. இருவரும் ஒரே குட்டையில் ஊரியவர் தான். எனவே தைரியமா ஒரு முடிவாய் எடுக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement