குமரியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு: விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (மார்ச் 18) காலை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். பின், அவர் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்.

தமிழகம் வருகை தந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். அவர், பாரதமாதா கோவிலில் வழிபட்டு, கேந்திரா நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். ஜனாதிபதி வருகையை ஒட்டி, கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (5)
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்”....ன்னு எம்ஜிஆர் பாடல் வரியில் வாலி எழுதியிருப்பார். அதுபோல... கிரிமினல் மூளை கொண்ட கலைஞர்... தான் மறைந்தாலும், 133அடி உயர திருவள்ளுவர் சிலையை... கடல் நடுவே வைத்து, அதன் மூலம் “இதை யார் வைத்தது..?” கேக்க வச்சி, அவர் பெயரை உச்சரிக்க வைத்துவிட்டார். பயங்கரமான ஆளுய்யா... நான் நேரில் சென்று பார்த்து வியந்து போனேன்.... என்ன ஒரு எதிர்கால திட்டமிடல். இதை ஓமந்தூரார் சட்டமன்ற கட்டிடம் போல அழிக்கவோ... பெயரை மாற்றவோ.... இடிக்கவோ முடியாதபடி சிந்திச்சு செஞ்சு வச்சிட்டு போயிட்டாரு... அந்தாளு... கிரிமினல் மூளை...ய்யா அந்தாளுக்கு....? இதைப் பார்த்துதான்... இந்திய பிரதமர் மோடிஜி..க்கு பட்டேல் சிலை வைச்சு பேர் வாங்கணும்...னு முடிவு செஞ்சி... இதைவிட மிக உயரமா வச்சி... தன் பெயரை நிலைநிறுத்திக் கொண்டார் மோடி... ஆக இந்த இரண்டு பேருமே... பயங்கரமான ஆளுங்கப்பா...
திருவள்ளுவர் போற்றப்படவேண்டியவர் .... அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது ... ..
அவர் வருகைக்காக கன்னியாகுமரியே அடிச்சு முடக்கம்....
திருவள்ளுவரை கண்டுபிடித்தது இராம்சாமிதான். அவர் மட்டும் இல்லை என்றால் திருக்குறளையே ஒருவருக்கும் தெரிந்திருக்காது... இதையெல்லாம் ஜனாதிபதியிடம் சொன்னார்களோ இல்லையோ தீம்காவினருக்கு நன்கு தெரியும்...