நாகர்கோவில் : பெண்ணை பாலியல் ரீதியாக அனுபவித்த பின் அவருக்கு வேறு ஒருவருடன் பாதிரியார் பெனடிக் ஆன்றோ திருமணமும் செய்து வைத்த தகவல் வெளியாகியுள்ளது. பாதிரியாரை கைது செய்ய இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு அருகே பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. கேரளாவை தலைமையகமாக கொண்ட மலரங்கரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் பாதிரியாராக பேச்சிப்பாறை, அழகியமண்டபம் பகுதி சர்ச்களில் பணியாற்றியுள்ளார். இங்கு வரும் பெண்களை வலையில் வீழ்த்தி நிர்வாணப்படம் எடுத்து அதை லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக நியாயம் கேட்க சென்ற சிலர் அவரை தாக்கி லேப்டாப்பை பறித்து சென்றனர். பாதிரியாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனியார் சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் பாதிரியார் பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் படங்கள் வெளியாகின. பாதிரியார் தலைமைறைவானார்.

இரண்டு தனிப்படை
இந்த சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் நர்சிங் படிக்கும் மாணவி ஆன்லைனில் பாதிரியார் மீது புகார் செய்திருந்தார். அதில் பாதிரியார் தன்னை தேவையில்லாத இடங்களில் தொட்டு பாலியல் வன்மம் செய்ததாகவும், அவரது அந்தரங்க உறுப்புகளின் படங்களை தனக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் மீது தற்போது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிரியாருடன் நிர்வாணமாக உள்ள ஒரு பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணத்தையும் அவரே நடத்தி வைத்துள்ளார். அந்த பெண்ணின் படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் எஸ்.பி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாரிடம் ஏமாந்த பெண்கள், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் செய்யலாம், அவர்களது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிரியாரிடம் இருந்து பறிக்கப்பட்ட லேப்டாப்பை தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் மேலும் பல பெண்களின் படம் இருப்பதாகவும், அவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (49)
ரெட் ஜெயிண்ட் போன்ற பிரபல சினிமா நிறுவனங்கள் கவனிக்க ,இவரை ஹீரோவாகப் போட்டுப் படம் எடுங்க ,படம் சும்மா பிச்சுக்கிட்டுப் போகும்...
பாவத்தின் சம்பளம் மரணம் ...
கிருத்துவன் முஸ்லீம் என்ன செய்தாலும் அது தவறேயில்லை இந்தியாவில் ???செகுலர் போர்வை டோலெராண்ட் போர்வை மைனாரிட்டி போர்வை வேற்று மதத்தவர் போர்வை இப்படியே போர்வை போர்த்தி போர்த்தி காங்கிரஸ் திரிணாமுல் திமுக .....தண்டக்கட்சிகள் அவர்களை தன் பக்கம் இழுக்க என்னவெல்லாம் முயற்சி செய்கின்றது????
எப்போது இந்து மதம் என்றால் பகுத்தறிவு என்றும், வேற்று மதம் என்றால் மத நம்பிக்கை என்றும் அரசியல்வியாதிகளால் மக்களுக்கு போதிக்கப்படும் வரை இது போன்ற காமுகர்கள் பாடு கொண்டாட்டம் தான். நீதிமன்றமும் இவர்களை தண்டிக்காது. சிறுபான்மை போர்வை இவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளித்து விடும். வோட்டு வங்கியை மனதில் வைத்து செயல்படும் மாநில அரசும் இவர்களை கண்டு கொள்ளாது.
விடுதலை சிறுத்தைகள், சீமான் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கெல்லாம் போராட்டம் நடத்தாதே.