Load Image
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இன்று மனு தாக்கல் துவங்கிய நிலையில், தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனிடம் எடப்பாடி பழனிசாமி, தன் வேட்புமனுவை வழங்கினார்.


கட்சியில் ஏகப்பட்ட பிரச்னை பிரிவுகளுக்கிடையே பொதுச்செயலர் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு: அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி பொதுச் செயலர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த விதிமுறையின்படி பொதுச் செயலர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது.


இன்று காலை வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைகிறது.

Latest Tamil News
வேட்பு மனுக்கள் மார்ச் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை மார்ச் 21ம் தேதி மதியம் 3:00 மணி வரை திரும்ப பெறலாம்.

போட்டி இருந்தால் மார்ச் 26ம் தேதி காலை 8:00 முதல் மாலை 5:00 வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மறுநாள் 27ம் தேதி காலை 9:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பொதுச் செயலர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சியினர் தலைமை அலுவலகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று அதை பூர்த்தி செய்து வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

பொதுச் செயலர் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தால் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளிட்ட 84 இடங்களில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (18)

  • ராஜா -

    நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா எல்லாம் சும்மாவா!? அண்ணாமலை அடி அதிமுகவுக்கு வேறு மாதிரி இடியாக விழும். எடப்படியயார் அம்மையார் அளவிற்கு புத்திசாலி இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Hilarious to note the election of g.secretary for edapadi AIADMK.who will file nomination against him. If any bidy our Jayakumar will act immediately along with shanmugam. IDHU ORU POZHUPPA.

  • Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா

    தமிழ்நாட்டை தற்சமயம் சூறையாடிக்கொண்டு இருக்கும் தீய சக்தியை அதிமுகவால் மட்டுமே மீட்க முடியும். அதாவது எடப்பாடி கே பழனிசாமியை தலைமையாக கொண்ட அதிமுகவால். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இரண்டு பேரும் அதிமுக வாக்குகளை டேமேஜ் செய்ய திமுகவுக்கு அல்லக்கைகளாக செயல்பட்டார்கள், படுகிறார்கள், படுவார்கள். கட்டுமர மாஃபியாவின் வாரிசு என்ற ஒற்றை தகுதியுடன் ஒரு தத்தி, தற்குறி கைல சிக்கி தமிழ்நாடு சின்னாபின்னமாகி நாறிக்கொண்டு இருக்கிறது. பத்து வருடங்களாக காய்ந்து போய் கிடந்த கும்பல் இப்போது லஞ்சம் ஊழல், கமிஷன், ரவுடித்தனம், மணல்கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று தமிழ்நாட்டை சூறையாடிக்கொண்டு இருக்கிறது. நோட்டாவோடு மட்டுமே போட்டி போடும் பாஜகவால் ஒன்றும் பண்ண முடியாது. தவிர பாஜக திமுக அண்டர்க்ரவுண்ட் பிஸ்னஸ் டீலிங் குறித்து தமிழக மக்களுக்கு சந்தேகம் வலுக்க தொடங்கி விட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது நிரூபணம் ஆகிவிட்டது. பாஜக ஆசிபெற்ற மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் ஆசியுடன் திமுக நடத்திய அயோக்கியத்தனத்தை கண்டும் காணாமல் இருந்தது. டென்ட்டுக்குள் வாக்காளர்களை அடைத்து வைக்கும் ஃபார்முலா என்ற பெயரில் இந்தியாவிலேயே கேவலமாக நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பறக்கும் படை பணபறிமுதல் பரிசுப்பொருட்கள் பறிமுதல் என்று எதுவும் செய்யாமல் ஆடுங்கடா என்று ஃப்ரீயாக விட்டது. பாஜக முதலில் அழிக்க நினைப்பது திமுகவை அல்ல, அதிமுகவை என்று லேட்டாகத்தான் அதிமுகவினர் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவை சேதப்படுத்தாமல் பாஜகவால் தமிழ்நாட்டில் வளரவே முடியாது. இந்த மொள்ளமாரித்தனம் தெரிந்தததால்தான் ஜெயலலிதா பாஜகவை தனது பக்கம் அண்டவிடாமல் தள்ளியே வைத்து இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்த கையோடு பாஜகவை கழட்டிவிடுவது அதிமுகவுக்கு நல்லது.இஸ்லாமிய கிருஸ்தவ மற்றும் க்ரிப்டோ கிருஸ்தவ வாக்குகள் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் இருக்கும். அதில் கால் சதவிகிதத்தை கூட பாஜகவை வைத்துக்கொண்டு அதிமுகவால் தொட முடியாது. பாஜக வேண்டுமானால் பாமக தேமுதிக அமமுக, போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளட்டும் என்று காலை சுற்றிய பாஜகவை கழட்டி கடாச வேண்டும் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டைஇலை மூன்றும் அதிமுகவின் எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். எடப்பாடி பழனிசாமி அவர்களே துரோகிகளை கழட்டி விடாமல் எதிரியை ஒருக்காலும் வெல்லமுடியாது.

    • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

      பாஜாக வினால் ஓட்டுக்கள் இல்லாமல் போகலாம்..இருக்கட்டும்..திமுக மட்டும் நியாயமாக நடவடிக்கையை மேற்கொள்ளுமானால் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஜெயிலுக்குள் போக நேர்ந்தால் அடுத்து யார் இந்த பதவியை அடையமுடியும் என்று சொல்வீர்களா?

    • Kadaparai Mani - chennai,இந்தியா

      மிக சிறந்த கருத்து .

    • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

      இது உங்களின் அறியாமை அல்லது தங்களின் வயது முதிர்வாக இருக்கலாம், தற்பொழுதைய அரசியல் களத்தில் அதிமுக தன் பலத்தை இழந்துவிட்டது, விரைவில் காங்கிரஸுக்கு போட்டியாக மட்டுமே வரும், உதாரணம் உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த வார்டையே எடப்பாடியால் காப்பாற்றாமல் போனது. மேலும் முதல்தலைமுறை வாக்காளர்களை கவர சரியான தலைவர் இல்லை, இவர்களின் செயல்திட்டத்தை வெளியிட சரியான ஊடகமும் இல்லை, ஜெயலலிதா என்ற ஆளுமை இருந்தவரை பெரும்பான்மையான இந்துக்களை யாரும் இழிவாக பேசுவதும், கோவில்களை இடிப்பதும் இல்லை, எனவே இந்துக்கள் ஆதரவளித்தனர், அவரின் தொடர்ச்சியை தமிழக பிஜேபி மற்றும் அதன் ஆதரவாளர்கள் மட்டுமே செய்கின்றனர்.. நீங்கள் இன்னனும் மைனாரிட்டி கார்ட் வைத்து தாஜா செய்தால் அதன் விளைவு கடுமையாக இருக்கும்.. 2026 தேர்தலிலுக்கு பின்னர் இரண்டு ஊழல்களும் இணைந்து திமுக + அதிமுக என்ற கேடுகெட்ட கூட்டணி உருவாகும்..

    • ஆரூர் ரங் - ,

      சிவனையும் கந்த சஷ்டி கவசத்தை யும் இழிவாகப் பேசிய ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக😡 போராட்டம் எதுவும் நடத்தியதாக? ஆனால் விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கர வாத பிரிவினைவாத சக்திகள் வன்முறையில் ஈடுபட்ட போது வாய் மூடி மறைமுக ஆதரவு தெரிவித்ததை ஹிந்துக்கள் உணரத் துவங்கி விட்டார்கள். ஜெயா மறைவுக்குப் பின்னர் இப்போது அதிமுக வின் இருப்பே அர்த்தமற்றதாகி விட்டது.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    கட்சியை பிளவு படுத்தி ஆதாயம் அடைய நினைத்தவர்கள் நிலை தான் பரிதாபம் ஆகும். .

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    குடும்ப கட்சிகளில் இது மாதிரி தேர்தல் நடத்த முடியுமா . அதிமுகவில் தேர்தல் நடத்துவது பாராட்ட மனமில்லாமல் குறை கூறி பயனில்லை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்