வேட்டைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் புலிகள் அழிந்து விடும்
ஆயுதங்கள்
தமிழக வனப் பாதுகாப்பு, வன விலங்குகள் வேட்டை தடுப்பு குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'சத்தியமங்கலத்தில், ஒரு வாரத்தில் ஐந்து புலிகள், அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டு உள்ளன. புலிகளை கொன்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்' என, தெரிவிக்கப்பட்டது.
''வேட்டையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வன விலங்கு வேட்டை தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தனியாக விசாரித்து வருகின்றனர்,'' என்றார்.
அபாயகரமான சூழல்
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஐந்து புலிகளை வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, சாதாரண வழக்கில் கைதானவர்கள் போல கருதக்கூடாது; அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில், ஓராண்டு சிறையில் அடைக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என, அரசு ஆராய வேண்டும்.
வேட்டைக்காரர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகத்தில் புலிகள் அழிந்து விடும்; புலிகளே இல்லை என்ற அபாயகரமான சூழல் உருவாகும். வழக்கு விசாரணை ஏப்.,17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!