Load Image
Advertisement

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடலில் நீந்தி சென்று திரும்பிய பெண் : 19.31 மணி நேரத்தில் 62 கி.மீ., தூரம் கடந்து சாதனை

Tamil News
ADVERTISEMENT


ராமநாதபுரம் :பெங்களூருவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜேத்தா தேப் பர்மன் 40, ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பாக் ஜலசந்தி கடலில் குறைந்த நேரத்தில் நீந்தி சென்று, மீண்டும் அங்கிருந்து திரும்பி சாதனை படைத்தார்.
சுஜேத்தா தேப் பர்மன் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சென்று அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வர திட்டமிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு மார்ச்சில் காலை 8:23 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து துவங்கி 10:00 மணி நேரம் 9 நிமிடங்கள் நீந்தி மாலை 6:33 மணிக்கு தலைமன்னார் அடைந்தார். அங்கிருந்து அதிகாலை 2:09 மணிக்கு தனுஷ்கோடிக்கு நீந்த துவங்கிய போது சர்வதேச கடற்பரப்பை தாண்டி ஜெல்லி மீன்கள் கடித்ததால் நீந்த முடியவில்லை.
இந்நிலையில் இரண்டாவது முயற்சியாக இந்திய -இலங்கை அரசுகளிடம் அனுமதி பெற்று சுஜேத்தா தேப் பர்மன் மார்ச் 15 மாலை 4:45 மணிக்கு தனுஷ்கோடியிலிருந்து துவங்கி 12 மணி நேரம் 15 நிமிடங்கள் நீந்தி மார்ச் 16 அதிகாலை 5:00 மணிக்கு தலைமன்னார் அடைந்தார். உடனடியாக
அங்கிருந்து திரும்பி மதியம் 12:20 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு திரும்பினார். 62 கி.மீ., தூரத்தை 19 மணி 31 நிமிடங்களில் நீந்தி முதல் பெண் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் குற்றாலீஸ்வரன், ஆனந்தன் ஆகியோர் இதே போல் நீந்தி உள்ளனர்.


வாசகர் கருத்து (3)

  • DVRR - Kolkata,இந்தியா

    ஆசீர்வாதம் குழந்தாய் 40 வயதிலும் இந்த அளவுக்கு ஒருமுக முயற்சி You Are Really Great Sujetha

  • Lawrence k - Dindigul,இந்தியா

    Vera level...👏👏👏

  • மூர்த்தி -

    வாழ்த்துக்கள்..கடின பயிற்சி மற்றும் விடா முயற்சி செய்து இந்த சாதனையை அடைந்துள்ள சகோதரி சாதனைகள் தொடரட்டும்.......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement