தேனி: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி முழு வீச்சில் நடந்தது. கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேடுதல் பணியில் ராணுவம் ஈடுபட்டது. கிழக்கு மண்டலாவில் உள்ள பங்லஜாப் கிராம மக்கள் மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக உள்ளூர் போலீசிடம் தெரிவித்தனர்.

அங்கு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பனிமூட்டமான சூழ்நிலையால் அப்பகுதியில் மீட்பு பணிகள் தாமதமானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில், பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பதை அறிந்ததும் அவரது சொந்த ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் இன்று (17.3.23) பெரியகுளம் கொண்டுவரப்பட இருக்கிறது.
முதல்வர் இரங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரருக்கு வீர வணக்கம். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். ராணுவ வீரர் மறைவால் வாடும் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், நாட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
இங்க மக்களுக்கு அதைப் பத்தின விவரமெல்லாம் சுத்தமா இல்ல++சேனல்களில் அதிகம் காட்டப் படுவது மோதிக் கொண்ட இரு கோஷ்டியினரின் எஜமானர்கள் ஒன்றிணைந்ததும், அவர்களின் கூட்டு அறிக்கையும் பற்றிய நீண்ட காட்சித் டபோகுப்பு தான்+++இங்குள்ள சேனல்கள் மற்றும் அடிப்பொடிகளுக்கு இப்படி நாட்டுக்காக உயிர்த்த தியாகம் செய்த ராணுவ அதிகாரி வீர மரணமெல்லாம் தேவைப் படாத வீண் நியூஸ்.
உண்மையான நாட்டின் ஹீரோவிற்கு வீர வணக்கம். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... ஜெய் ஹிந்த்...
வீரத் தமிழருக்கு வீர வணக்கம். குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம். ஜெய் ஹிந்த்
ராணுவ வீரர் ஜெயந்த் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். ஓம் ஷாந்தி.
ஒரு நபர் ஒரே ஒரு ரூபாய் கூட அல்லது அதற்கு மேலும் தங்கள் விருப்பப் படி நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்கும் இத்தகைய ராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக அளித்திடும் விதமாக கனரா வங்கியின் பேமெண்ட் செயலி ஒன்றை அரசு அதிகாரிகள் துவக்கி வைத்து தற்போது செயல் பாட்டில் உள்ளது .++++அதில் பொது மக்கள் தங்கள் விரும்பும் தொகையை மொபைல் மூலம் அனுப்ப ஏற்பாடாகியுள்ளது++++செயலி விவரம்: ARMY WELFARE FUND , BATTLE CASUALTIES,A/C NUMBER: 90552010165915, IFSC:CNRB0000267. SOUTH EXTENSION BRANCH, NEW DELHI. என்பது . நமது பாதுகாப்புக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்கள்மீது நாம் அனுதாபம் கொள்வது மட்டும் போதாது என எண்ணுபவர்கள் , இந்த கணக்கை செக் செய்து விட்டு தங்களது மனதுக்கேற்ப ஒரு தொகையை அனுப்பலாம் என்று கூறப் படுகிறது.+++(எனது பங்களிப்பை இதன் மூலம் இன்று அனுப்பி அதற்கான வங்கியின் ஒப்புகையும் மொபைல் மூலம் கிடைக்கப் பெற்றேன்)