கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி:
'நீட்' ரகசியத்தை சொல்கிறேன் என்று காலம் கடத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி, தொடர் போராட்டம் தான் நீட் ரகசியம் என்று சொல்லியிருப்பது, மாணவ சமுதாயத்தையே ஏமாற்றுவதாகும்.மக்களை ஏமாற்றுவதில், தி.மு.க.,வில் தலைமுறை வேறுபாடுகள் இல்லை என்பதை, அமைச்சர் உதயநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.
விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்...? அவர் விளையாட்டு பிள்ளையாக இருப்பதால் தான், 'சிம்பாலிக்'கா அந்த துறையை அவரிடம் கொடுத்திருக்காங்களோ?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
'துாக்கி பிடித்தால் கொடி; திருப்பி பிடித்தால் தடி; எதிர்த்து பேசினால் அடி' என்பது தான் திராவிட மாடலின் திருவாக்கியம். திருச்சியில், தி.மு.க.,வினர் நடத்திய மோதலை பார்க்கும் போது, 'தமிழகத்தில் ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது' என, இதைத்தான் அரசியல் வானிலை முன்னறிவிப்பு போல, முதல்வர் ஸ்டாலின் சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வாஸ்தவம் தான்... 'ஆட்சியை கலைக்கிற சதியைக் கூட, அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்'னு தி.மு.க.,வினர் களமாடுறாங்களோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
சமீப காலமாக, ஆவின் பால் மற்றும் உபபொருட்கள் வினியோகத்தில், மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 14 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டது. சில நாட்களாக, 10 லட்சம் லிட்டர் மட்டுமே விற்கப்படுகிறது. 10 நாட்களாக, எந்த ஆவின் பாலகத்திலும் வெண்ணெய் இருப்பு இல்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைக்கு முன்கூட்டியே தி.மு.க., அரசு தீர்வு கண்டிருந்தால், பால் பற்றாக்குறை என்ற பிரச்னையே ஏற்பட்டு இருக்காது. இந்த நிலைக்கு, தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கே காரணம்.
ஒரு துறை, தொடர்ந்து பின்னோக்கி போயிட்டே இருக்குது என்றால், அதன் தலைமையை மாற்றுவது தானே தீர்வு... ஆனா, 'அரசு நிறுவனம் எப்படி போனால் என்ன... கட்சிக்காரன் மனசு நோகக் கூடாது' என, தலைமை நினைப்பது தான், இதுபோன்ற பிரச்னைக்கு காரணம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'கல்வி உரிமை பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே, நீட் விலக்கிற்கான ரகசியம்' என, உதயநிதி தெரிவித்துள்ளார். கல்வி என்ற பெயரால், லஞ்சம், ஊழல் வழியே மக்களிடம் பணம் பறிக்கப்பட்ட போது, தைரியமாக அறிமுகப்படுத்தப்பட்டதே நீட் தேர்வு. அது ரகசியம் அல்ல; வெளிப்படையான சீர்திருத்தம்.
அதனால் தானே, 'திராவிட மாடல்' அரசுக்கு, அது வேப்பங்காயாக கசக்கிறது!
வாசகர் கருத்து (9)
நீட் தேர்வு வந்த பிறகு தான் ஏழை மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் கூட நுழைந்து படிக்க முடிகிறது, சிந்திக்கவும் நீட் தேர்வுக்கு முன் ஒரு சாதாரண மாணவன் எத்தனை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள், மருத்துவம் என்றாலே கோடிகளில் பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற நிலைதான் இருந்தது.நீட் என்பது எளிய பொருளாதார கும்பத்திற்ற்கு மத்தியஅரசு கொடுத்த கல்வி பரிசு.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே, தனது கட்சியினர் சம்பாதிப்பதற்குத்தானே.
நாராயணன் கருத்துக்கள் நாள் தவறாமல் இந்த பகுதியில் வெளியாவதன் ரகசியம் யாவரும் அறிவர்.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'எதிர்த்து பேசினால் தேச துரோக வழக்கு இதுதான் மோடியின் கொள்கை மற்றும் செயல்
இஙகு நீட் நுழைய்யவு தேர்வு பற்றி அடிப்படையை புரிதல் இல்லாமால் சிலர் எதிர்த்து எழுது கிறார்கள் . உண்மைய்யகா மாணவர்கள் அரசியல் வாதிகள் போல் ஊடகங்களுக்கு சென்று அவர்கள் கருத்தை தெரிவிப்பதில்லை. அப்படி பெரும்பாலான மாணவ மணிக்கள் நேரிடையாக அவர்கள் விருப்பதைய்ய கூறினால் இந்த அரசியல் வாதிகளின் பிழைப்பு நாறி விடும். கடந்த 60 - 70 முன்பிருந்ததைய்ய காட்டிலும் தமிழகம் கல்வியில் தரம் தாழ்ந்து போய கொண்டிருக்கிறது