ADVERTISEMENT
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீஆதிவராக நல்லூரில் பழமையான பிள்ளையார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூரைச் சேர்ந்தவர் மனோகர், 40. இவர் தனது வயலுக்கு அருகில் உள்ள தெற்கு வாய்க்கால் பகுதியில் மீன் பிடிப்பதற்காக பள்ளத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினார்.
அப்போது, சேற்றில் புதைந்த நிலையில் இருந்த பழமையான பிள்ளையார் கற்சிலை இருப்பதை கண்டார். சிலை கனமாக இருந்ததால், நண்பர்களை வரவழைத்து, சிலையை வெளியே எடுத்தார்.
கிராம மக்கள் பிள்ளையார் சிலையை சுத்தம் செய்து மாலையிட்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி, தாசில்தார் (பொறுப்பு) செந்தில்வேல் ஆகியோர் பிள்ளையார் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!