தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்
புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனை, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உடனடியாக இதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்ச் 8 ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
இத்தனை மாநிலம் ஜம்ப் பண்ணி நமக்கு மட்டும் கொரோனா சோதனை எப்ட்றா...
அடுத்த 20 லட்சம் கோடி வரப்போகுது. பெரிய அண்டாவா கொண்டாங்க. பங்குச் சந்தையில் தான் புடிக்க முடியும்.
கொரோனா மேல் பழியைப் போட்டு அடுத்த பொருளாதார சரிவு இந்தியாவில் விரைவில் ஆரம்பம் ....
What we are seeing is now a combination of Influenza caused by H3N2 virus and a spurt in COVID cases. Both are terrible to suffer. Why has there been no upgradation of the Covid vaccines (Covishield, Covaxin) against the newer Corona virus variants ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மக்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் நல்லது.