Load Image
Advertisement

ஹிந்து கோவிலில் வழிபாடு செய்த மெகபூபா முப்தி: அரசியல் டிராமா என பா.ஜ., விமர்சனம்

BJP terms Mehbooba Mufti's Navagraha temple visit in Poonch as 'gimmick' ஹிந்து கோவிலில் வழிபாடு செய்த மெகபூபா முப்தி: அரசியல் டிராமா என பா.ஜ., விமர்சனம்
ADVERTISEMENT

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிந்து மத வழிபாட்டு தலத்தில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வழிபாடு செய்துள்ளார். இது அரசியல் டிராமா என பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹிந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்று தரிசனம் மேற்கொண்டார்.
அங்குள்ள நவகிரக வழிபாட்டு தலத்தில் சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இது குறித்து பா.ஜ.,வின் ஜம்மு காஷ்மீர் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ரன்பீர் சிங் பதானியா கூறுகையில், '2008ல், மெஹபூபா முப்தியும் அவரது கட்சியும் ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் ஒதுக்குவதை எதிர்த்தனர்.
அவரது கட்சி தற்காலிகமாக கோவில் வாரியத்திற்கு நிலத்தை மாற்ற அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஹிந்து கோவிலுக்குச் சென்றது வெறும் அரசியல் டிராமா தான். அது எந்தப் பலனையும் தராது' என்றார்.

Latest Tamil News
ஹிந்து கோவிலில் வழிபாடு நடத்தியது தொடர்பாக மெகபூபா முப்தி அளித்த விளக்கம்: இந்த கோவிலை யஷ்பால் சர்மா கட்டினார். அவரது மகன் நான் கோவிலுக்கு வரவேண்டும் என விரும்பினார்.
அதனால் கோவிலுக்கு சென்ற என்னிடம் ஒருவர் தண்ணீர் அடங்கிய பாத்திரத்தை வழங்கினார். அதனை ஏற்க மறுப்பது தவறு என்ற காரணத்தால் அதனை வாங்கி அபிஷேகம் செய்தேன். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.


வாசகர் கருத்து (25)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    "ஆஹா எப்படிப்பட்ட மத நல்லிணக்கம், நல்லிணக்கம்" என்று குடியிருந்த வீட்டைக் கொடுத்து விட்டு அவுங்க குடுத்த குச்சி மிட்டாயை வைத்துக் கொண்டு ஆடும் நாட்டுப் பற்று இல்லாத புளகாங்கித கும்பல் உலகில் வேறு எங்காவது உண்டா தெரிய வில்லை++++ஏமாத்து வேலையை பார்த்து அதுக்கே இப்புடி ஒரு ஆட்டம்++++அமைதி மார்க்கம் என்பது நூத்துக்கு ஆயிரம் சதம் ஒன் வே ரூட்டுன்னு கூட தெரியாத ஜென்மங்கள் இருக்கும் வரை இந்த ஏமாற்றுக் கூட்டத்துக்கு கவலையே கிடையாது.

  • sridhar - Chennai,இந்தியா

    வடக்கில் ஹிந்துக்களை முறைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது . கத்தோலிக்க ராகுல் கூட விபூதி பூசி சிவன் கோவில் செல்ல வேண்டும். இங்கே உள்ளது போல் பிரியாணிக்கு விலை போன ஹிந்துக்கள் கிடையாது .

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    காஷ்மீரி பிராமிணர்கள் என்ற முகமூடி அணிந்து வந்தேறிகளாக உள்ளே வந்து நாட்டையும் மக்களையும் சூறையாடிய தீவிரவாத கும்பலுக்கு இந்த ட்ராமாவெல்லாம் ஜுஜுபி..1990.ஜனவரி 19. நடந்த காஷ்மீரி பண்டிட்டுகள் இனஅழிப்பில் முன்னின்று நடத்தியவர்கள் இந்த ஜீபூம்பா சூனியக்காரியின் கொலைகார அப்பன் முப்தி மொஹமதுவும் இவர்களின் தீவிரவாத கூட்டமும். இந்த நா..கள் குடும்பமே மரணதண்டனை விதிக்கப்பட்டு நாடுகடத்தப்படவேண்டிய ஒன்று ...அதை விடுத்து இந்த கேடுகெட்ட ட்ராமா, நாட்டு நாட்டு மொக்கை டான்ஸ் பார்த்து கொண்டு இருக்கும் நாம் எல்லோரும் மானங்கெட்டவர்களே.

  • R Sudarsan -

    Hindu temples should have rules to prohibit entry of other religion. can some Hindu enter a mosque and Pray?

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    இவர்கள் எல்லாம் கோயிலுக்கு வரவில்லை என்று யாரும் அழவில்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் தீபாவளிக்கு சொல்வது இல்லை என்று தான் கண்டிக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்