தேசத்திற்கு எதிராக பேசவில்லை; அனுமதித்தால் பார்லி.,யில் பதிலளிக்க தயார்: ராகுல்

லோக்சபாவில் ராகுல் வருகை சராசரி வருகையை விட குறைவாக உள்ளது என அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். லண்டன் சென்றுவிட்டு காங்., எம்.பி ராகுல் நேற்று டில்லி திரும்பினார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராகுல் இன்று(மாரச் 16) பார்லி., வந்தார்.

லண்டனில் தேசத்தை அவமதித்ததாக ராகுலுக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில் பார்லி.,க்கு வெளியே ராகுல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேசத்திற்கு எதிராகவும், அவமதிக்கும் வகையிலும் நான் எதுவும் பேசவில்லை. என்னை பார்லி., யில் பேச அனுமதித்தால் இது குறித்து நான் பதிலளிப்பேன். எனக் கூறினார்.
வாசகர் கருத்து (16)
அப்போ நீ பேசினது உனக்கே என்ன்வென்று தெரியாதா. நம்ம தமிழுக்கு வருவோமா???பப்பு ஒருவனை மடையன் என்று சொன்னால் அதன் அர்த்தம் இது தானாம். மடையன். பப்புவின் அர்த்தம் - மடை அவன் - மடை திறந்த வெள்ளம் போல பேசுபவன். இன்னும் இதைப்போல நிறைய இருக்க பப்பு
என்ன பேசினோம் என்று தெரியாத இதுக்கெல்லாம் பிரதமர் ஆக ஆசை. கெட்டது போ குடி.
ஒரு தலைப்பை கொடுத்து பேச சொன்னாலோ அல்லது ஒரு கேள்வி கேட்டாலோ இவர் பேசும் விதம் அல்லது பதில் சொல்லும் விதம் ஒரு முதிர்ச்சியடைந்த தலைவர் மாதிரி இருப்பதில்லை. கேம்பிரிட்ஜ் பல்கலையில் இவர் பேசிய விதம் அவ்வாறு இருந்தது. நிறைய நேரம் யோசித்து ஏதோ சொல்ல ஆரம்பித்து கோர்வையாக இல்லாமல் வார்த்தையை வெட்டி வெட்டி சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி , தானும் குழம்பி , கேள்வி கேட்டவரை குழப்பி அப்ப்பப்ப்பா ...........இவர் பேச்சை ஏன்டா கேட்டோம் என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறார்.
அது வேற வாய்... நாரவாய்.... நான் அவன் அல்ல
முதலில் பாராளுமன்றத்துக்குள் இனிமேல் நுழைய விடக்கூடாது.