Load Image
Advertisement

மேலும் பல பெண்களுடன் பாதிரியாருக்கு தொடர்பு: போலீஸ் மவுனம்

And priests liaison with many women: police silence  மேலும் பல பெண்களுடன் பாதிரியாருக்கு தொடர்பு: போலீஸ் மவுனம்
ADVERTISEMENT
நாகர்கோவில்: ஆபாச வீடியோவில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ 30, தலைமறைவாகி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது பெங்களூரில் நர்சிங் படிக்கும் மற்றொரு பெண்ணும் பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து போலீசார் தொடர்ந்து மவுனம் காக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. அழகியமண்டபம் பகுதியில் பாதிரியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் ஒரு கும்பல் இவரை தாக்கி அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. பெனடிக் போலீசில் புகார் செய்யவில்லை. அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ஜினோ என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் பெனடிக் பெண்ணுடன் இருக்கும் ஆபாச படங்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட ஆஸ்டின்ஜினோவின் தாயார் மினி அஜிதா, போலீசில் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: பாதிரியாருடன் இருக்கும் பெண் எனது மகனின் தோழி. பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சரால் தற்கொலை முடிவில் இருப்பதாக அந்தப்பெண் கூறியுள்ளார். இதை கேட்க சென்ற போது பாதிரியார் பதவியை ராஜினமா செய்வதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்றும் கூறினார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. ஆனால் அவரது பெற்றோர் புகாரில் எனது மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.

இவரிடம் நேற்று ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் விசாரணை நடத்தினார். பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவர் மார்ச் 11ல் எஸ்.பி. அலுவலகத்தில் இதே பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் பாதிரியார் தனக்கு ஆசி வழங்கும் போது தவறான முறையில் தொட்டு பேசியதாகவும், அலைபேசி எண்ணை பெற்று தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

பெனடிக் தலைமறைவாகி விட்டார். அவர் மீதான நடவடிக்கை குறித்து சர்ச் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த விவகாரத்தை மூடி மறைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.


வாசகர் கருத்து (44)

 • vadivelu - thenkaasi,இந்தியா

  இவனுங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் , மதம் , மோடி வெறுப்பு, இரண்டும் இவர்களை காப்பாற்றும்.

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  பெண்கள் தரம் கெட்டு போய்விட்டனர், ஒரு மாயை, மூடநம்பிக்கை தொட்டால் பட்டால் நல்லது நடக்கும் என்று. ஒன்று சொல்லியது மற்றது எதையும் சொல்லாது

 • கோட்ஸே (சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி) - சிங்கார சென்னை ,இந்தியா

  பராமபிதாவின் ரத்தம் என்று மதுவை கொடுப்பார்கள், இவர் பாலை கொடுத்து ஒரு புரட்சி செய்துள்ளார். இவர் என்ன நித்தியா ட்ரொல் போட்டு மானத்தை வாங்க. பரபிதாவின் சீடர் அல்லவா, இவர் எதை செய்தாலும் தவறு இல்லை.

 • Ramanathan Muthiah - Madras,இந்தியா

  2024 இல் தமிழ்நாட்டிற்கு மட்டும் தேர்தல் இல்லை ‼️ என்று சொன்னால் எப்படி இருக்கும்⁉️ தமிழ்நாட்டை mathiya‼️அரசு நேரடி கட்டுப்பாட்டில் நடத்தும் என்றால் ‼️‼️ இது மட்டும் நடந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பது நின்றுவிடும் 🙏🏽🇮🇳🇮🇳🇮🇳 நியாமான MP களை, மத்திய பிஜேபி அரசே நியமனம் செய்ய வேண்டும் 👆🏿🫂🫂🫂🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

 • g.s,rajan - chennai ,இந்தியா

  பாத்தா பாதிரியார் மாதிரி தெரியலையே .... சினிமாவில் நடிக்கும் வில்லன் மாதிரி இருக்காரு ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement