Load Image
Advertisement

திருமாவை சரிக்கட்ட முயற்சி: துரைமுருகனுக்கு பா.ம.க., தூது

Tried to fix Thiruma: Duraimurugan to PMK, Dutu   திருமாவை சரிக்கட்ட முயற்சி: துரைமுருகனுக்கு பா.ம.க., தூது
ADVERTISEMENT
சென்னை: தி.மு.க., பொதுச்செயலரும், நீர் வளத் துறை அமைச்சருமான துரைமுருகனை, பா.ம.க., தலைவர் அன்புமணியின் கடிதத்துடன், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு சந்தித்து பேசியிருப்பதன் பின்னணியில், கூட்டணி திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி வலுவாக இல்லாததால், தி.மு.க., கூட்டணியில் சேர, பா.ம.க., முயற்சித்து வருகிறது. ஆனால், தி.மு.க., அணியில் உள்ள வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், 'பா.ம.க., - பா.ஜ., இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இருக்க மாட்டோம். பதவிக்காக கொள்கையில் சமரசம் செய்ய மாட்டோம்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

திருமாவளவன் வெளியேறினால், ஐந்தாண்டுகளாக வலுவாக உள்ள தி.மு.க., கூட்டணி கலகலத்து விடும் என ஸ்டாலின் நினைக்கிறார். எனவே, திருமாவளவனை சமாதானப்படுத்தினால் தான், ஆளும் கூட்டணியில் சேர முடியும் என்ற நிலைமை பா.ம.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கான முயற்சியாக, பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு, நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அரியலுார் மாவட்டத்தில், சோழர் கால பாசன திட்டத்தை செயல்படுத்த கோரி, அன்புமணி எழுதிய கடிதத்தை வழங்கினார்.
Latest Tamil News
கடந்த பிப்ரவரியில் முதல்வரை அன்புமணி சந்தித்ததன் தொடர்ச்சியாக, துரைமுருகனை பாலு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், ராமதாஸ், அன்புமணியின் திட்டங்கள் குறித்தும் துரைமுருகன் கேட்டுள்ளார். அவரிடம் திருமாவளவனை சமாதானப்படுத்தி, பா.ம.க., வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி பாலு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது: வேலுார் தொகுதியில், தன் மகன் கதிர் ஆனந்த் சுலபமாக வெற்றி பெற வேண்டுமானால், பா.ம.க., கூட்டணி அவசியம் என துரைமுருகன் நினைக்கிறார். பா.ம.க.,வுக்கு 10 சதவீதத்திற்கும் மேல் ஓட்டு வங்கி உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களின் விருப்பமும் இது தான்.

ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதாலும், ஒருசில கட்சிகள் எதிர்ப்பதாலும், பா.ம.க.,வை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமான திருமாவளவன் உள்ளிட்டோரை சரிக்கட்டி, சிக்கல்களை தீர்க்க துரைமுருகன் உதவுவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (26)

  • Nachimuthu - mettur,இந்தியா

    சரி கட்ட கொஞ்சம் செலவு அதிகமாகும்

  • அருணா -

    பமகா விற்கு நேரம்ச ரி இல்லை

  • Sivaraman - chennai ,இந்தியா

    விசிக பாமக ஒரே அணியில் வந்தால் விசிக காரன் பாமக காரன் பொதுமக்கள் அவங்க அணியை விட்டு எதிர் அணிக்கு ஒட்டு போடுவாங்க. ஏன்டா இவங்களுக்காக அடிச்சிக்கணும் என நினச்சு அழகா வேற வேட்பாளருக்கு ஒட்டு . இனி காவடி தூக்க வேண்டாம் என நினைப்பான்

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    மதத்தின் பெயரால் அரசியலாம் ...இதை சொல்வது மதத்தின் பெயருள்ள கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் மத சார்பற்ற கூட்டணி ....இதுதான் ராமசாமி திராவிட தத்துவம் ...

  • LoveGuru -

    வேலூர், சேலம் தர்மபுரி அங்கே 10 தொகுதி ஜெயிக்கணும்னு பாத்தா சென்னை லருந்து அரியலூர் வர திருமா இல்லாட்டி dmk ஜெயிக்கமுடியுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்