Load Image
Advertisement

துபாய் கிளம்புகிறார் அழகிரி: டில்லிக்கு போகும் கோஷ்டிகள்

Alagiri leaves for Dubai: Goshtis to Delhi    துபாய் கிளம்புகிறார் அழகிரி: டில்லிக்கு போகும் கோஷ்டிகள்
ADVERTISEMENT
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி துபாய் செல்லும்போது, அவரது பதவியை பறிக்க, எதிர் கோஷ்டி தலைவர்கள் டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நீடிக்கிறார். அவரை மாற்றும்படி, கடந்த ஆண்டு நவம்பரில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், தமிழக கோஷ்டிகள் வலியுறுத்தின.

ராகுல் ஒற்றுமை யாத்திரை, கட்சி மாநாடு போன்ற காரணங்களால், கார்கே மவுனமாக இருந்து விட்டார். ஆனால், அழகிரியை மாற்றும் வரை, அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என, எதிர் கோஷ்டிகள் முடிவு செய்துள்ளன.
Latest Tamil News
சமீபத்தில், அதானி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை, காங்., மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர். இதுகுறித்து, டில்லி மேலிடத்தில், அழகிரி தரப்பில் புகார் செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடத்த, மேலிடம் ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், வரும் 19ம் தேதி துபாயில் நடக்கும் உலக தமிழர்கள் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க, அழகிரி முடிவு செய்துள்ளார். அவர் துபாய் சென்றதும், கோஷ்டி தலைவர்கள் கூட்டாக, டில்லி சென்று கார்கேவிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்.

'அழகிரியை மாற்றும் வரை, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்' என, அவர்கள் திட்டவட்டமாக தெரிவிக்க உள்ளனர்.


- நமது நிருபர் -


வாசகர் கருத்து (2)

  • raja - Cotonou,பெனின்

    கட்சி தலீவரு விடியல் போல கோடிகளில் முதலீடு செய்யநுமுண்ணு துபாய் வால் மக்கள் சார்பாக கேட்டுகிரோமுங்க...

  • Sivaraman - chennai ,இந்தியா

    எத்தனை கோஷ்டி இருக்கட்டுமே அத்தனையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போடும் சோற்றை தின்று சும்மா இருங்கள் என்று சொல்லும் சக்தி திராவிடக் கட்சிக்கு இருப்பதை பாராட்டத்தான் வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்